ட்ரோல்களை தாண்டி ’சும்மா கிழி’த்த ஃபர்ஸ்ட் சிங்கிள்.. தென்னிந்தியாவிலேயே இதுதான் டாப்!

Recommended Video

DARBAR Chumma Kizhi Lyric Video explained | Rajinikanth | A.R. Murugadoss | Anirudh | SPB

சென்னை: ரஜினிகாந்தின் தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள 'சும்மா கிழி' பாடல் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் வியூஸ்களை பெற்று தென்னிந்தியாவிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.

டிவோ மியூசிக்கில் வெளியான தர்பார் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'சும்மா கிழி' பாடல் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் 8 மில்லியன் வியூஸ்களை பெற்று தென்னிந்திய சினிமாவிலே அதிக வியூஸ்களை பெற்ற பாடலாக பழைய ரெக்கார்டுகளை எல்லாம் சும்மா கிழித்துள்ளது.

சிக்கலில் சும்மா கிழி

தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘சும்மா கிழி' பாடல், ஸ்ரீஹரி பாடிய ஐயப்பா பாடலின் காப்பி என்றும், வைகாசி பொறந்தாச்சு படத்தில் வரும் தண்ணி குடம் எடுத்து தங்கம் நீ நடந்து வந்தால் பாடலின் காப்பி என்றும் ரஜினி ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வந்தனர். ஆனாலும், ரஜினி ரசிகர்கள் அதை பொருட்படுத்தமால் ரெக்கார்டு பிரேக் செய்துள்ளனர்.

ரெக்கார்டு பிரேக்கிங் சும்மா கிழி

சும்மா கிழி பாடல் 24 மணி நேரத்தில் 8 மில்லியன் ரியல் டைம் வியூஸ்களை கடந்து தென்னிந்தியாவிலேயே 24 மணி நேரத்தில் 8 மில்லியன் வியூஸ் கடந்த முதல் பாடலாக மாறுமா என காலையில் இருந்தே ரஜினியின் தீவிர ரசிகர்கள், ரெக்கார்டு பிரேக்கிங் சும்மா கிழி ஹேஷ்டேகை டிரெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில், அந்த ரெக்கார்டை அசால்ட்டாக தர்பார் பாடல் கடந்து சாதனை புரிந்துள்ளது.

தலைவர் 168 அப்டேட்

சும்மா கிழி பாடல் ரெக்கார்டு பிரேக் செய்துள்ள நிலையில், அடுத்ததாக தலைவர் 168வது படம் குறித்த அப்டேட்டுக்கு ரெடியா என சன் பிக்சர்ஸ் தற்போது ஒரு ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் ட்வீட்

தர்பார் படத்தின் இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் டிக் டாக்கில் வைரல் வீடியோக்களை பதிவிட்டு வரும் பாட்டி சும்மா கிழி பாடலுக்கு போட்டுள்ள டிக் டாக் வீடியோவை ஷேர் செய்து சும்மா கிழி டிக் டாக்கில் இது தான் பெஸ்ட் என பதிவிட்டுள்ளார்.

சோஷியல் மீடியா ராஜா

எல்லா சாதனைகளும் தலைவரின் காலுக்கு கீழ் தான் சோஷியல் மீடியாவின் எம்பரர் வயது 69 ஆகுது, ஆனா, எல்லா ரெக்கார்டுகளையும் சும்மா கிழித்தெறிகிறார் என ரஜினி ரசிகர் இந்த ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X