twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்தல் எதிரொலி: விஸ்வரூபம் 2, நான் சிவப்பு மனிதனும் தள்ளிப் போகின்றன?

    By Shankar
    |

    தேர்தல் காரணமாக விஷால் நடித்த நான் சிவப்பு மனிதன் உள்பட பெரிய படங்கள் தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    நாட்டின் பொதுத் தேர்தல் நேற்று அறிவிக்கப்பட்டதிலிருந்து பல துறைகளிலும் திடீர் மாற்றங்கள், தள்ளிப் போடல்கள்.

    குறிப்பாக திரைத்துறையில். கோடை விடுமுறையில் வெளியாகவிருந்த புதிய படங்களான கோச்சடையான், நான் சிவப்பு மனிதன், விஸ்வரூபம் மற்றும் தெனாலிராமன் போன்ற படங்கள் இப்போது தள்ளிப் போகும் சூழல் உருவாகியுள்ளது.

    கோச்சடையான்

    கோச்சடையான்

    ரஜினி நடித்த கோச்சடையான் படம் ஏப்ரல் 11-ம் தேதி வருவதாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாக படத்தின் வசூல் பாதிக்கும் சூழல் உள்ளதால், இந்தப் படத்தை மே 16-ம் தேதிக்கு மேல் வெளியிட திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை மறுநாள் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2

    விஸ்வரூபம் 2 படம் மே 9-ம் தேதி வெளியாகும் என்று கூறியிருந்தனர். ஆனால் இப்போது அதில் மாற்றம். மே இறுதி அல்லது ஜூனுக்கு தள்ளிப் போகிறது படம்.

    தெனாலிராமன்

    தெனாலிராமன்

    வடிவேலுவின் ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படம் தமிழ்ப் புத்தாண்டு வெளியீடாக வரும் என்று அறிவித்திருந்தனர். இப்போது அதிலும் மாற்றம். படத்தை மே இறுதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

    நான் சிகப்பு மனிதன்

    நான் சிகப்பு மனிதன்

    விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தின் இசை வரும் 13-ம் தேதி வெளியாகிறது. அடுத்த ஒரு மாதத்துக்குள் படத்தை வெளியிடுவதில் விஷால் உறுதியாக உள்ளார். ஆனால் தேர்தல் காரணமாக மேலும் ஒரு மாதம் தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும் என விநியோகஸ்தர்கள் அவருக்கு அறிவுறுத்தி வருகிறார்களாம்.

    English summary
    The Summer biggies of Tamil cinema are postponed to May end due to the announcement of elections.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X