Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மே மாதம்... வசூலை அள்ள வரும் சம்மர் ஸ்பெஷல் படங்கள்!
சென்னை: கோடை விடுமுறை முடிய இன்னும் சரியாக ஒரு மாதம்தான் உள்ளது. இந்த விடுமுறைக்குள் இருக்கிற படங்களை வெளியிட்டு வசூலை அள்ள வரிசையில் நிற்கின்றன முக்கியமான படங்கள்.
கிட்டத்தட்ட 12 படங்கள் மே மாத ரிலீசுக்கு காத்திருந்தாலும், ரஜினியின் கோச்சடையான் வருகை காரணமாக திரையரங்குகள் கிடைப்பது கடினமான விஷயமாகிவிட்டது, மற்ற படங்களுக்கு.
கோச்சடையான் வெளியாகி இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வரை வேறு படங்களுக்குத் தர முடியாது என்பதை ஏற்கெனவே திரையரங்க உரிமையாளர்கள் கூறிவிட்டனர். அதன் பிறகுதான் மற்ற படங்கள் வெளியாக முடியும்.
இனி சம்மர் ஸ்பெஷல் படங்கள்...
கோச்சடையான்
ரஜினியின் கோச்சடையான் மிகப் பெரிய எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது. தமிழகத்தில் உள்ள மொத்த அரங்குகளில் 90 சதவீதம் கோச்சடையானுக்குத்தான் தரப்பட உள்ளது. கோச்சடையான் வெளியாகும் நாளில் மட்டுமல்ல, அதற்கடுத்த வாரத்திலும் கூட வேறு படங்கள் வெளியாவது கஷ்டம்தான்.
பூலோகம்
ஜெயம் ரவி - த்ரிஷா நடித்துள்ள இந்தப் படம் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. குத்துச்சண்டையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படமும் மே மாத ரிலீசுக்குக் காத்திருக்கிறது.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்
சந்தானம் நாயகனாக நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் ஓரளவு எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. மே 16 ம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அந்த வாரம் தியேட்டர் கிடைக்காவிட்டால், மேலும் தள்ளிப் போகலாம்.
மஞ்சப் பை
விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்துள்ள இந்தப் படம், இயக்குநர் சற்குணத்தின் சொந்தப் படம். மே இறுதி வாரத்தில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
சைவம்
இயக்குநர் விஜய் தயாரித்து இயக்கியுள்ள சைவம் படமும் இம்மாத வெளியீடுதான். உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். விஜய் - அமலா பால் திருமணத்துக்கு முன் படம் வெளியாகிவிடும் என்கிறார்கள்.
பிற படங்கள்..
இவை தவிர, திருமணம் எனும் நிக்காஹ், விஜய் சேதுபதி நடிக்கும் மெல்லிசை, ஸ்ரீகாந்தின் நம்பியார், விமல் நடித்த ரெண்டாவது படம், விக்ரம் பிரபுவின் அரிமா நம்பி, கிருஷ்ணா நடித்த யாமிருக்க பயமே... போன்றவையும் மே மாதத்தை குறி வைத்துக் காத்திருக்கின்றன.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!