சம்மரை டார்கெட் செய்து வெளியாக உள்ள தமிழ் படங்கள் ஒரு பார்வை!
சென்னை: கொரோனா தொற்றின் தாக்கத்திற்கு பிறகு தமிழ் சினிமா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
பொங்கலன்று வெளியான மாஸ்டர் படத்தை தொடர்ந்து, மற்ற படக்குழுவினர்களும் முன்வந்து திரையரங்குகளில் படங்களை வெளியிட்டனர்.
தற்போது ரசிகர்களை மகிழ்விக்க பல படங்கள் சம்மர் ரிலீஸை டார்கெட் செய்துள்ளது. சம்மரில் ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்துள்ள படங்கள் குறித்த ஒரு தொகுப்பு.

உறுதியான படங்கள்
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி - ராஷ்மிகா ஆகியோர் நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான். அதை தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம் கர்ணன். ஏப்ரல் முதல் பாதியில் வெளிவரவுள்ள இந்த இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பாக கர்ணன் படத்தின் மீது.

A.L. விஜயின் தலைவி
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் ஏப்ரல் 14 அல்லது அதற்கு அடுத்த வாரத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் ஏப்ரல் 23ம் தேதி சத்யராஜ், சசிகுமார் நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன் படமும், பெரிய எதிர்பார்ப்பில் உள்ள, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி படமும் வெளியாகவுள்ளது.

டாக்டர், அரண்மனை 3
மே மாதத்தில் ரம்ஜான் அன்று சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் ரிலீஸ் ஆவது உறுதியாகியுள்ளது. சுந்தர்.C இயக்கத்தில் வெளிவரவுள்ள அரண்மனை படத்தின் 3 பாகம் மே மாதத்தின் முதல் பாதியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

சம்மரில் 4 படங்கள்
மற்ற நடிகர்களின் படங்கள் ஒரு புறம் இருக்க, விஜய் சேதுபதியின் 4 படங்கள் சம்மரில் வெளியாக தயாராக உள்ளது. ஏப்ரல் 14ம் தேதி துக்ளக் தர்பார், 30ம் தேதி லாபம் பின்னர் மே மாதம் 14ம் தேதி யாதும் ஊரே யாவரும் கேளீர், 28ம் தேதி மாமனிதன் என விஜய்சேதுபதியின் 4 படங்கள் சம்மரில் வெளிவர தயாராகவுள்ளது.


Click it and Unblock the Notifications