சன் பங்களா: புது டிவி சேனலை துவங்கிய சன் நெட்வொர்க்
சென்னை: சன் டிவி பெங்காலி மொழியில் சன் பங்களா சேனலை துவங்கியுள்ளது.
சன் தொலைக்காட்சி சேனல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இயங்கி வருகிறது. இந்நிலையில் பெங்காலி மொழியிலும் சேனல் துவங்கப்பட்டுள்ளது.

அந்த சேனலுக்கு சன் பங்களா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சன் பங்களா சேனல் இன்று முதல் செயல்படுகிறது. இதை சன் டிவி முறையே ட்விட்டரில் அறிவித்துள்ளது.
சன் டிவியின் அறிவிப்பை பார்த்தவர்கள் வாழ்த்தியுள்ளனர். மேலும் பல மொழிகளிலும் சேனல் துவங்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளனர். தொழில் போட்டியை சமாளிக்க புது சேனலா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications