சிங்கிள்ஸ்க்கு ஆதரவு.. சன் நெட்ஒர்க்கின் காதலர் தின ஸ்பெஷல் ப்ரொமோஷன்!
Recommended Video
சென்னை : காதலர் தினத்தை முன்னிட்டு சன் நெட்ஒர்க் நிறுவனம் வித்தியாசமான விளம்பர யுக்தியை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
காதலர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழில் நான் சிரித்தால் , ஓ மை கடவுளே மேலும் சில படங்கள் வெளியாகுகின்றன. இதே நேரத்தில் சமூக வலைத்தளங்கள் எங்கும் காதலர் தினத்தை பற்றிய பேச்சுக்கள் சூடு பிடித்துள்ளது. காதலர் தினத்தை ஒட்டி படங்கள் மற்றும் பாடல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் இருக்கிறது .

இதே நேரத்தில் சமூகவலைத்தளங்களில் சிங்கிள்ஸ் மற்றும் முரட்டு சிங்கிள்களின் புலம்பல்களும் அதிகரித்து உள்ளது. சிங்கிள்ஸ் என்பவர்கள் காதல் செய்யாதவர்களாக இருப்பார்கள் அல்லது காதலில் தோல்வியுற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஏக்கத்திற்கேற்ப பல படங்களும், பாடல்களும் ஒருபுறம் ஸ்டேடஸ்களாக வைக்கப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் சன் நெட்ஒர்க் நிறுவனம் தனது வித்தியாசமான விளம்பர யுக்தியை இணையத்தில் இயக்கியுள்ளது. பேட்ட படத்தின் ஒரு முக்கிய காட்சியை பதிவேற்றி சிங்கிள்ஸ்களுக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்துள்ளது சன் நிறுவனம்.

பேட்ட படத்தில் விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்தில் வட இந்தியாவில் காதலர்களை எதிர்க்கும் ஒரு கும்பலை வழிநடத்தி காதலர் தினத்தன்று காதலர்களுக்கு கட்டாய திருமணம் செய்து வைப்பார். இந்த காட்சியை தான் தற்போது சன் நிறுவனம் காதலர் தின ஸ்பெஷலாக பதிவேற்றி இருக்கிறது. அப்படியே அந்த காணொலியில் பேட்ட படத்தின் இணைய லிங்கையும் பதிவேற்றி அப்படியே புரோமஷனும் கொடுத்துள்ளது.
இந்ந காணொலியை பதிவேற்றி இரு நண்பர்கள் பேசுவது போன்ற வசனத்தையும் இணைத்துள்ளார்கள். அதில் ஒரு காதலிக்கும் நண்பர் தனது சிங்கிள் நண்பரை பார்த்து காதலர் தினத்திற்கு என்ன பிளான் என்று கேட்கிறார். அதற்கு கீழ் பேட்ட படத்தில் காதலர்களை துன்புறுத்தும் விஜய் சேதுபதி செயலை பதிவேற்றியுள்ளனர் .
இன்றைய மீம் கிரியேட்டர்களுக்கு ஏற்றார் போல தற்போது வீடியோ மீம்களின் மூலம் விளம்பரங்களில் ஈடுபட்டு வருகிறது சன் குழுமம். இந்த வீடியோ மட்டுமின்றி பல படங்களுக்கும் இணையத்தில் இவ்வாறான புரோமஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
காதலர் தினத்திற்கு பலரும் பல பிளான்களில் ஈடுபட்டு வந்தாலும் முரட்டு சிங்கிள்கள் தங்களின் ஆதங்கங்களை மீம் வாயிலாகவும், பாடல்கள், படங்களின் வாயிலாகவும் வெளிபடுத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஏற்றார்போல, தற்போது சன் போன்ற பெரிய நிறுவனங்களும் வித்தியாசமான விளம்பர யுக்தியை கையாண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











