முன்னணி ஹீரோக்களின் படங்களுடன் சன் பிக்சர்ஸ்.. வியக்க வைக்கும் படவரிசை

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது.

முன்னணி ஹீரோக்களின் படங்களை சரியான முறையில் தொடர்ந்து தயாரித்து மக்களிடையே கொண்டு சேர்க்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக தயாரித்து வெளியிட உள்ள 4 படங்களும் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்களின் படங்களாகும்.

ரஜினி - சிவா

ரஜினி - சிவா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. இம்மாதத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நிச்சயமாக வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சன் பிக்சர்ஸ் நேற்று இது குறித்து அறிவிப்பை வெளியிட்டது. தீபாவளிக்கு படம் வெளிவரும் என சன் பிக்சர்ஸ் உறுதியளித்துள்ளது.

சூர்யா - பாண்டிராஜ்

சூர்யா - பாண்டிராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தனது 40வது படத்தில் நடிக்கிறார். ஜூலை 12ம் தேதி இந்த படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

தனுஷ் - அனிருத்

தனுஷ் - அனிருத்

தனுஷின் 44வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இயக்குனர் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் தனுஷ் - அனிருத் கூட்டணி இணைந்துள்ளது. எனவே இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தினை குறித்த முக்கிய தகவல்கள் தனுஷ் பிறந்தநாளான ஜூலை 28ம் தேதி வெளிவரும் என தெரிகிறது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அண்மையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் மீதும் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X