திருச்சிற்றம்பலம் படத்துக்கு ஆடியோ லான்ச்.. ஒரே மேடையில் அசத்தவுள்ள அனிருத் – தனுஷ்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் தனுஷ் மற்றும் சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளனர்.
மேலும், தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து திருச்சிற்றம்பலம் பட பாடல்களை பாடப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

யாரடி நீ மோகினி இயக்குநர்
யாரடி நீ மோகினி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மித்ரன் ஜவஹர். இயக்குநர் செல்வராகவனின் உதவி இயக்குநராக இருந்த மித்ரன் ஜவஹர் செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய படத்தின் தமிழ் ரீமேக் தான் யாராடி நீ மோகினி. மேலும், குட்டி மற்றும் உத்தமபுத்திரன் உள்ளிட்ட படங்களையும் இவர் தான் இயக்கினார்.

மீண்டும் காமெடி டிராக்கில்
காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, பொல்லாதவன், அசுரன் என ராவான படங்களில் நடித்தாலும், கூடவே ஜாலியான படங்களிலும் தனுஷ் நடித்து கமர்ஷியல் விரும்பிகளையும் கவர்ந்து வந்தார். இந்நிலையில், மீண்டும் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் அந்த ஆடியன்ஸை டார்கெட் செய்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

மூன்று ஹீரோயின்கள்
நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் மற்றும் ராஷி கன்னா என மூன்று ஹீரோயின்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். திருவிளையாடல் ஆரம்பம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையே பயங்கர மோதல் இந்த படத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு டெலிவரி பாயாக மீண்டும் தி பாய் நெக்ஸ்ட் டோர் கதாபாத்திரத்தில் கலக்க உள்ளார் தனுஷ்.
ஆடியோ லான்ச்
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்துக்கு ஆடியோ லான்ச் நடத்தாத நிலையில், நடிகர் தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள திருச்சிற்றம்பலம் படத்திற்கு நாளை இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்திருக்கிறது சன் பிக்சர்ஸ். இது லைவ் நிகழ்ச்சி இல்லை என்றும் விரைவில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் என்றும் கூறியுள்ளனர்.

தனுஷ் அனிருத் காம்போ
வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு பிரிந்த தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி மீண்டும் பல ஆண்டுகள் கழித்து திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்நிலையில், நாளை நடைபெற உள்ள இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மற்றும் அனிருத் இணைந்து அரங்கை அதிர விடப் போவதாக தனுஷே ட்வீட் போட்டு இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











