தலைவர் 169 படத்தின் டைட்டில் 'ஜெயிலர்’.. ரத்தக் கறை படிந்த கத்தியுடன் வெளியானது வெறித்தனமான போஸ்டர்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள படத்தின் அதிரடியான டைட்டில் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video
இன்று காலை 11 மணிக்கு ஸ்டார் படத்தை போட்டு அறிவிப்பு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்து இருந்தது.
ரஜினிகாந்த், ஷங்கர் இணையப் போகும் படத்தின் அறிவிப்பு வெளியாகுமா? அல்லது நெல்சன் படத்தின் டைட்டில் வெளியாகுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தின் அட்டகாசமான டைட்டில் வெளியாகி உள்ளது.

ஜெயிலர்
தமிழ் சினிமாவில் இதுவரை 168 படங்களை ரசிகர்களின் பொழுதுபோக்கிற்காக கொடுத்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது 70வது வயதில் மீண்டும் ஒரு வெறித்தனமான என்டர்டெயின் படத்தை கொடுக்க காத்திருக்கிறார். ரத்தக் கறை படிந்த கத்தியுடன் ‘ஜெயிலர்' எனும் டைட்டிலை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

லீக் ஆகிடுச்சு
சில நாட்களுக்கு முன்னதாகவே இந்த டைட்டில் தான் தலைவர் 169 படத்தின் டைட்டில் என சமூக வலைதளங்களில் கசிந்த நிலையில், அதே டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலராக வெறித்தனம் காட்ட தயாராகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். கையில் இருக்கும் கத்திக்கும் டைட்டிலுக்கும் என்ன சம்பந்தம் என ரசிகர்கள் கேள்விகளை கிளப்பி உள்ளனர்.

பீஸ்ட் தோல்வி
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு ஹிட் கொடுத்த நெல்சன் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய பீஸ்ட் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஏகப்பட்ட ட்ரோல்களும் இயக்குநர் நெல்சனை சுற்றி அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதற்கு எல்லாம் பதிலடி கொடுப்பாரா இந்த ஜெயிலர் மூலமாக நெல்சன் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ஆங்கில தலைப்பு
முதல் படமான கோலமாவு கோகிலா படத்தை தவிர இயக்குநர் நெல்சன் தொடர்ந்து டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என ஆங்கில தலைப்புகளையே வைத்து வருவதாகவும் அவர் மீது தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர். இந்நிலையில், ரஜினிகாந்த் படத்துக்கும் ஆங்கில தலைப்பையே அவர் தேர்வு செய்துள்ளார்.

கிரிமினல்
ஜெயிலர் என்கிற டைட்டில் ஏற்கனவே லீக்கான நிலையில், கிரிமினல் என்கிற டைட்டிலும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவலக்ள் வெளியாகின. ஆனால், முதலில் யோசித்த ஜெயிலர் டைட்டிலே படத்தின் கதையை சொல்லாத விதமாக இருப்பதாக முடிவு செய்த நிலையில், அதையே வைத்துள்ளனர்.

என்ன அவசரம்
சமீபத்தில் சிவாஜி படத்தின் 15 ஆண்டுகள் நிறைவடைந்தது கொண்டாடப்பட்ட நிலையில், உடனடியாக படத்தின் டைட்டிலை அறிவிக்க என்ன அவசரம் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இன்னும் நெல்சன் ஸ்க்ரிப்ட் வொர்க்கை முடித்து படப்பிடிப்பையே ஆரம்பிக்காத நிலையில், படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியிட காரணம் என்ன என கேள்விகள் எழுந்துள்ளன.

கமல் காரணமா
விக்ரம் படத்தின் மூலம் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ள கமல்ஹாசன் தான் இந்த அவசரத்துக்கு காரணமா? என்றும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதங்களை நடத்தி வருகின்றனர். மேலும், டைட்டில் அறிவிப்பை மட்டுமே வெளியிட்ட நிலையில், படத்தில் நடிக்கக் கூடியவர்கல் குறித்த அறிவிப்பு, படப்பிடிப்பு ஆரம்பம் எப்போது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











