Jailer Audio Launch - ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா.. இலவச பாஸ்கள் ரெடி.. இது செமயா இருக்கே

சென்னை: Jailer Audio Launch (ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா) ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்வதற்காக இலவச பாஸ்கள் வழங்கப்படவிருக்கின்றன.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த். அவருடன் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். மேலும் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகிபாபுவும் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா படமாக ஆகஸ்ட் பத்தாம் தேதி ஜெயிலர் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Sun Pictures Announces 1000 Free Passes To Attend The Jailer Audio Launch

ஹிட்டாக வேண்டும் ஜெயிலர்: பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சன் திலீப்குமார் ரொம்பவே பட்டுவிட்டார். கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய இரண்டு தரமான படங்களை கொடுத்தாலும் விஜய்யை வைத்து சொதப்பியதால் நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். அதே சமயம் ஒரு படம் தோல்வியடைந்ததை வைத்து நெல்சன் திலீப்குமாரை குறைத்து மதிப்பிடக்கூடாது என ஆதரவு குரல்களும் எழுந்தன. எனவே ஜெயிலர் படம் நிச்சயம் ஹிட் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார் அவர்.

ரஜினியும் அப்படித்தான்: அதேபோன்ற ஒரு நிலைமையில்தான் ரஜினிகாந்த்தும் இருக்கிறார். இதற்கு முன்னதாக அவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்தன. எனவே ரஜினியின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக பலர் பேச ஆரம்பித்தனர். ஆனால் தோல்வி படங்கள் கொடுத்த பிறகு வீரியத்துடன் கம்பேக் கொடுப்பவர் தலைவர். எனவே ஜெயிலர் மெகா ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

இரண்டு சிங்கிள்கள்: படத்திலிருந்து காவாலா, ஹுக்கும் ஆகிய இரண்டு சிங்கிள்கள் ரிலீஸாகியிருக்கின்றன. காவாலாவில் தமன்னா ஸ்கோர் செய்ய இரண்டாவது சிங்கிளான ஹுக்கும் முழுக்க முழுக்க ரஜினிக்காகவே உருவாக்கப்பட்டிருந்தது. முக்கியமாக, அடுத்த சூப்பர் ஸ்டார் என்பவர் யாருமில்லை ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிதான் என்பதை குறிக்கும் விதமாக பாடல் வரிகள் இருந்தன. அந்த வரிகளை எழுதிய பாடலாசிரியர் சூப்பர் சுப்புவை ரஜினி பாராட்டியிருந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.

ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழா: இந்தச் சூழலில் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 28ஆம் தேதி சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில் படக்குழுவினர் கலதுகொள்ளவிருக்கின்றனர். ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினியின் பேச்சு எப்போதும் மாஸாக இருக்கும் என்பதால் ஜெயிலர் விழாவில் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இலவச பாஸ் ரெடி: இந்நிலையில் ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்வதற்கு தோதாக படக்குழு ஒரு ஏற்பாட்டை செய்துள்ளது. அதன்படி ரசிகர்களுக்கு 1000 இலவச பாஸ்கள் வழங்கப்படவிருக்கின்றன.அதாவது 500 பேர் இரண்டு பாஸ்களை பெற்றுக்கொள்ளலாம். நாளை மதியம் 1 மணிக்கு Http://Jailer.Sunpictures.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் பாஸ்களை பதிவு செய்துகொள்ளலாம் என சன் பிக்சர்ச்ஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X