உணவு டெலிவரி பாயா தனுஷ்.. திருச்சிற்றம்பலம் அப்டேட் வருது.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!

சென்னை: அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வந்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாக தனுஷின் திருசிற்றம்பலம் படத்தை ரிலீஸ் செய்யும் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கி உள்ளது.

யாரடி நீ மோகினி படத்தை இயக்கி நடிகர் தனுஷுக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் ஜவஹர் மித்ரன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்துள்ள படம் தான் திருச்சிற்றம்பலம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் மற்றும் ராஷி கன்னா என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

யாரடி நீ மோகினி இயக்குநர்

யாரடி நீ மோகினி இயக்குநர்

தனுஷ், ரகுவரன், நயன்தாரா நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் வசூல் ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தெலுங்கில் இயக்குநர் செல்வராகவன் இயக்கிய ஆடவாரி மாட்டலாக்கு அர்த்தலே வெருலே படத்தை தமிழில் தனுஷை வைத்து மித்ரன் ஜவஹர் இயக்கி இருந்தார்.

தனுஷ் உடன் இணைந்து

தனுஷ் உடன் இணைந்து

2008ம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படம் ஹிட் அடித்த நிலையில், 2010ம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடித்த ஆர்யா படத்தை தமிழில் குட்டி என ரீமேக் செய்தார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான மற்றொரு படமான ரெடி படத்தை தமிழில் உத்தமப்புத்திரன் என்கிற பெயரில் ரீமேக் செய்திருந்தார். குட்டி மற்றும் உத்தமப்புத்திரன் படங்கள் சரியாக போகாத நிலையில், அதன் பிறகு தனுஷ் உடன் இணைந்து அவர் பணியாற்றவில்லை.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்

ரஜினிகாந்தின் அண்ணாத்த, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், விஜய்யின் பீஸ்ட் என முன்னணி நடிகர்களின் படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷின் திருச்சிற்றம்பலம் படமும் உருவாகி வருகிறது. இந்த படம் தொடர்பான அப்டேட்டை ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில், நாளை அப்டேட் வரும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அனிருத் இசை

அனிருத் இசை

வேலையில்லா பட்டதாரி படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் கூட்டணி தற்காலிகமாக ஒன்றாக இணையாத நிலையில், திருச்சிற்றம்பலம் படத்தில் DNA கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்திற்கு வெயிட்டிங் என தனுஷ் ட்வீட் போட்ட நிலையில், அனிருத்தும் தனுஷ் ட்வீட்டுக்கு கமெண்ட் போட்டுள்ளார்.

மூன்று ஹீரோயின்கள்

மூன்று ஹீரோயின்கள்

யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் இயக்குநர் மித்ரன் ஜவஹர். இந்நிலையில், இந்த படத்தில் நித்யா மேனன், ராஷி கன்னா மற்றும் பிரியா பவானி சங்கர் என முற்றிலும் தனுஷ் உடன் புதுமையான ஹீரோயின் கூட்டம் இணைந்திருக்கும் நிலையில், படம் எப்படி மிரட்டப் போகுது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். பிரகாஷ் ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

உணவு டெலிவரி பாயா

உணவு டெலிவரி பாயா

திருச்சிற்றம்பலம் படத்தின் அப்டேட் நாளை வரும் என அறிவித்துள்ள சன் பிக்சர்ஸ் பைக் மற்றும் உணவு டெலிவரி பார்சல் பேக்குடன் போஸ்டர் வெளியிட்டுள்ள நிலையில், தனுஷ் இந்த படத்தில் உணவு டெலிவரி பாயாக நடித்துள்ளாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆகி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் திருச்சிற்றம்பலம் கன்ஃபார்மாக தியேட்டரில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X