ஹாட்ரிக்.. இந்த பண்டிகையை பிடித்த ரஜினி.. பேட்ட, தர்பார் தொடர்ந்து அண்ணாத்த படமும் பொங்கல் ரிலீஸ்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

Recommended Video

Annathe Release Date Announced | Nasser Kabadadhari Dubbing, Master Post Production Starts

பொதுவாக தீபாவளி, பொங்கல் போன்ற பெரிய பண்டிகை நாட்களில் உச்ச நட்சத்திர நடிகர்களின் படங்கள் வெளியாவது, அவர்களது ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம் ஆக அமையும்.

இந்நிலையில், அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அண்ணாத்த படம் ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஹாட்ரிக்

இது ஹாட்ரிக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த், விஜய்சேதுபதி நடிப்பில் உருவான பேட்ட படம் ரிலீசானது. இந்த வருடம் ரஜினி, நயன்தாரா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைக்கு வந்தது. இந்நிலையில் அடுத்த ஆண்டும் ரஜினியின் அண்ணாத்த ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை அடுத்து, ரஜினிக்கு இது ஹாட்ரிக் பொங்கலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஸ்வாசத்துக்கு பிறகு

விஸ்வாசத்துக்கு பிறகு

தல அஜித், நயன்தாரா நடிப்பில் பேட்ட படத்துக்கு போட்டியாக கடந்த பொங்கலுக்கு சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படம் வெளியாகி மெகா பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அண்ணாத்த படம் இந்த ஆண்டு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லாக்டவுன் காரணமாக அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போயிருக்கிறது.

மீண்டும் அஜித்துடன் மோதல்

மீண்டும் அஜித்துடன் மோதல்

தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட தல அஜித்தின் வலிமை படத்தின் ரிலீசும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஸ்வாசம் வெர்சஸ் பேட்ட போட்டியை போல அண்ணாத்த வெர்சஸ் வலிமை போட்டியும் ஏற்படுமா என்பதை போனி கபூர் தான் உறுதி செய்ய வேண்டும்.

ஆர்.ஆர்.ஆர்

ஆர்.ஆர்.ஆர்

அதேபோல இயக்குநர் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் படத்துடனும் அண்ணாத்த படமும் இந்தியளவில் போட்டி போடும் என்றும், இதனால், மிகப்பெரிய கிளாஷ் உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு விறு விறுவென படத்தின் ஷூட்டிங் முடிந்து பொங்கலுக்கு வருவது உறுதியாகி உள்ள நிலையில், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தர்பாரை போல

தர்பாரை போல

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது. அந்த படத்தை போல அண்ணாத்த ஆகிவிடாது என்பதில் ரஜினி ரசிகர்கள் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். இயக்குநர் சிவா இதுபோன்ற கிராமத்து கதைகளில் சிக்ஸர் அடிக்கக் கூடியவர் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என நட்சத்திர பட்டாளங்களுடன் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம், அடுத்த ஆண்டு குடும்பங்கள் தியேட்டரை நோக்கி படையெடுக்கும் விதமாக சிறந்த பொங்கல் பரிசாக இருக்கும் என ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களை தெறிக்க விட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X