Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் இணையும் தமன்னா.. உறுதிப்படுத்திய சன் பிக்சர்ஸ்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவரும் படம் ஜெயிலர்.
இந்தப் படத்தை பீஸ்ட் படத்திற்கு பிறகு டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சென்னை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் நடிகர் சுனிலின் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு போஸ்டரை நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. வித்தியாசமான கெட்டப்பில் அவர் அந்த போஸ்டரில் காணப்பட்டார்.
உங்க
அரசியல்
எல்லாம்
என்கிட்ட
வச்சிக்காதீங்க..
போனில்
மிரட்டினா
பயப்பட
மாட்டேன்..
வனிதா
விளாசல்!

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அடுத்ததாக அவரது ஜெயிலர் படத்தையும் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தை விஜய்யின் பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். பீஸ்ட் படம் ரிலீசுக்கு முன்னதாகவே ரஜினியின் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.

சென்னையில் பிரம்மாண்ட சூட்டிங்
தொடர்ந்து ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ரஜினியுடன் பிரபல மலையாள நடிகர் மோகன்லால மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார், சுனில், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இயக்குநர் நெல்சன்
மிகவும் பிரம்மாண்டமான அளவில் ஜெயிலர் படம் உருவாகிவருகிறது. முன்னதாக கோலமாவு கோகிலா, டாக்டர் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்த நெல்சன் திலீப்குமார் அந்தப் பெயரை விஜய்யின் பீஸ்ட் படத்தில் தக்க வைக்க தவறிவிட்டார். வசூலில் வெற்றி பெற்றாலும் பீஸ்ட் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

அதிக கவனத்துடன் நெல்சன்
இந்நிலையில் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கேற்ப அவர் மிகவும் கவனமாக ஜெயிலர் படத்தை எடுத்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் இணைந்த தமன்னா
முன்னதாக இந்தப் படத்தில் தமன்னாவும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இந்த செய்தியை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தமன்னாவின் அழகிய புகைப்படத்துடன் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தகவல் தற்போது ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்தடுத்த அறிவிப்புகள்
நேற்று முன்தினம் ஜெயிலர் படத்தின் சுனில் கேரக்டர் குறித்த அறிவிப்பை மேற்கொண்டது சன் பிக்சர்ஸ். அந்த செய்தியும் புஷ்பா படத்தின்மூலம் கவனம் பெற்ற சுனிலின் கெட்டப்பும் ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இன்றைய தினம் தமன்னா படத்தில் இணைந்துள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.