தனுஷின் 50வது படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.. வித்தியாசமான போஸ்டருடன் அறிவிப்பு!

சென்னை : நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தை தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.

அடுத்தடுத்த பல படங்களை அறிவித்துவரும் சன் பிக்சர்ஸ் இன்றைய தினம் தனுஷின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 50வது படத்தை தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

ரஜினியின் ஜெயிலர் படம்

ரஜினியின் ஜெயிலர் படம்

நடிகர் ரஜினியின் அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் அவரது அடுத்தப்படமான ஜெயிலர் படத்தையும் தயாரித்து வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தின் 60 சதவிகித சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் நிறைவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதத்திற்குள் சூட்டிங்கை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸின் அடுத்தப்பட அறிவிப்பு

சன் பிக்சர்ஸின் அடுத்தப்பட அறிவிப்பு

இந்தப் படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் ரம்யா கிருஷ்ணன், சுனில் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் ஜெயில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் தற்போது தனது அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தனுஷின் 50வது படம்

தனுஷின் 50வது படம்

நடிகர் தனுஷின் 50வது படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் சிறப்பான வகையில் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. இதில் அதிகமான வீடுகளும் புகை மண்டலமும் சூழ்ந்து காணப்படுகிறது.

விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள்

விரைவில் அடுத்தடுத்த அறிவிப்புகள்

இந்தப் படத்தின் இயக்குநர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பை விரைவில் சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம். விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு, அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடித்துவருகிறார் தனுஷ்.

ரிலீசுக்கு காத்திருக்கும் வாத்தி படம்

ரிலீசுக்கு காத்திருக்கும் வாத்தி படம்

கோலிவுட்டில் மட்டுமில்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என தன்னுடைய நடிப்பின் எல்லைகளை விரிவுப்படுத்தி வருகிறார் தனுஷ். தற்போது வாத்தி படத்தின்மூலம் தெலுங்கிலும் நேரடி படத்தில் நடித்துள்ளார். அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். இதனிடையே வெங்கி அட்லூரி இயக்கத்தில் அவரது வாத்தி படமும் ரிலீசாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X