Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இரண்டு மெகா புராஜெக்டுகள்... இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்!
Recommended Video
பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தது. ஆனால் தயாரித்த அல்லது வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும்பாலும் குப்பைதான். அவற்றை தங்களின் மெகா விளம்பர யுக்தியால் வெற்றிப்படமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.
முதல் படம் காதலில் விழுந்தேன். ரொம்ப சுமாரான படம். ஆனால் அந்தப் படத்துக்கு சன் வெளியிட்ட விளம்பரங்கள் இருக்கிறதே... அட்ராசியஸ்!
அடுத்த படம் தெனாவட்டு. இந்தப் படத்துக்கும் இதே டைப் விளம்பரம்தான். ஆனால் திண்டுக்கல் சாரதி பரவாயில்லை எனும் அளவுக்கு இருந்தது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பிரமாண்ட படம் எந்திரன் உண்மையிலேயே பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அடுத்து அஜித் நடித்த மங்காத்தாவுக்கும் ப்ளாக்பஸ்டர்தான். குட்டிப் புலி படத்துக்குப் பிறகு படத் தயாரிப்பில் பெரிய ஈடுபாடு காட்டவில்லை சன்.
ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போது இரண்டு மெகா புராஜெக்டுகளுடன் களத்தில் இறங்கியுள்ளது சன் பிக்சர்ஸ். அதில் ஒன்று ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் புதிய படம். அடுத்து விஜய் நடிக்க, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம்.
இந்த இரண்டுமே தமிழ் சினிமாவே பெரிதும் எதிர்ப்பார்க்கும் படங்களாகியுள்ளன. இவற்றுடன் ராகவா லாரன்ஸ் இயக்கும் காஞ்சனா 3 படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரிக்கிறது என்பது கூடுதல் தகவல்.
முன்பு சன் பிக்சர்ஸ் படங்கள் என்றாலே, இப்படித்தான் இருக்கும் என ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள். ஆனால் அந்த ஸ்டைலை மாற்றிக் கொண்டுள்ளது சன் பிக்சர்ஸ். வரவேற்கத்தக்க மாற்றம்தான்!