Tamannaah - ஓவர் ஆட்டிட்யூட் காட்டினாரா தமன்னா?.. சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்காததற்கு இதுதான் காரணமா?

சென்னை: Tamannaah (தமன்னா) தமன்னாவுக்கு சன் பிக்சர்ஸ் பரிசு கொடுக்க திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் கொடுக்காததற்கு பின்னால் ஒரு காரணம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மெகா ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. கடந்த சில வருடங்களாக தடுமாறிக்கொண்டிருந்த ரஜினிக்கு நெல்சன் திலீப்குமாரும், பீஸ்ட்டில் விழுந்த நெல்சன் திலீப்குமாரை ரஜினிகாந்த்தும் கைகொடுத்து தூக்கியிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கூறிவருகிறார்கள்.

Sun Pictures had planned to gift Tamannaah but there was a reason behind not giving it

மெகா வசூல்: படத்தின் ரிலீஸ் நாளிலிருந்தே ஜெயிலர் படம் வசூலை அள்ளி வந்ததாகவே பல தகவல்கள் ஓடின.ஒரு வாரத்தின் முடிவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஒரு வார முடிவில் 375 கோடி ரூபாயை தாண்டிவிட்டதாக சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. மேலும் இதுவரை 650 கோடி ரூபாயை தாண்டி வசூல் சென்றுகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் படம் ரிலீஸாவதால் இன்னும் ஒரு வாரத்துக்கு ஜெயிலர் ஃபீவர் வீடுகளிலும் இருக்கும்.

கலாநிதி மாறன் பரிசு: இந்தச் சூழலில் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டதால் கலாநிதி மாறன் பரிசுகளை அள்ளி கொடுத்துவருகிறார். அதன்படி ரஜினி வீட்டுக்கு சென்ற அவர் செக்கை கொடுத்து இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை காட்டி எது வேண்டுமோ எடுத்துக்கொள்ள சொன்னார். அதேபோல் நெல்சனிடமும், அனிருத்திடமும் சில கார்களை கலாநிதி காட்ட அவர்கள் போர்ஷே கார்களை பரிசாக பெற்றுக்கொண்டனர். ரஜினிக்கு கொடுத்தது போல் அவர்களுக்கும் செக் ஒன்றை பரிசாக கொடுத்தார்.

காவாலா தமன்னா: இதற்கிடையே ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிளாக காவாலா பாடல் வெளியானது. அது வெளியானதிலிருந்தே ஜெயிலர் பீவர் பற்றிக்கொண்டது. அனிருத்தின் இசை பயங்கரமாக இருந்தாலும் அதைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்தது தமன்னாவின் நடனம். அந்த நடனத்தை பார்த்த பலரும் அதேபோல் ரீல்ஸ் செய்து வீடியோக்களை போட ஆரம்பித்தனர்.

தமன்னாவுக்கு பரிசு இல்லை ஏன்?: சூழல் இப்படி இருக்க ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு பரிசு கொடுத்ததைப் போல் ஜெயிலர் ஃபீவரை ஆரம்பித்துவைத்த தமன்னாவுக்கு ஏன் பரிசு கொடுக்கவில்லை என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்நிலையில் தமன்னாவுக்கு ஏன் பரிசு கொடுக்கப்படவில்லை என்பது குறித்த தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது.

அதன்படி, காவாலா பாடல் ஷூட்டிங் நடந்த சமயத்தில் தமன்னா ரொம்பவே ஆட்டிட்யூட் காட்டினாராம். அந்த சமயத்தில் சில பாலிவுட் படங்களிலும் வெப் சீரிஸ்களிலும் நடித்துக்கொண்டிருந்தார். இதன் காரணமாக காவாலா பாடலுக்காக சொன்ன நேரத்தி வராமல் இருந்தாராம். அவர் வராததால் ஒட்டுமொத்த படக்குழுவும் காத்திருக்க வேண்டிய சூழலுக்கும் தள்ளப்பட்டதாம். ஷூட்டிங்கை முடித்தால் போதும் என நினைத்த படக்குழுவும் பொறுமையாக இருந்ததாம். அதையெல்லாம் மனதில் வைத்துதான் தற்போது தமன்னா இந்த வெற்றி கொண்டாட்டத்திலிருந்து ஓரங்கட்டப்பட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X