பாட்டாவே பாடிட்டாங்களா... சன்பிக்சர்ஸின் அசத்தல் அறிவிப்புகள்.. வேறலெவல்! #Thalaivar168
Recommended Video
சென்னை: ரஜினியின் 168வது படத்தின் ஆர்ட்ஸ்ட்களை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வித்தியாசமான முறையில் அறிவித்து வருகிறது.
ரஜினிகாந்த் நடிக்கும் 186வது படத்தை கலாநிதிமாறனின் சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.
தலைவர் 168வது படத்திற்கு இசையமைப்பாளர் இமான் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் நடிகர் சூரி நகைச்சுவை நடிகராக நடிக்கிறார்.

குழப்பம்
படம் குறித்த அப்டேட்ஸ்களும் அறிவிப்புகளும் வந்தவண்ணம் உள்ளன. ஏற்கனவே படத்தில் யார் நாயகிகள் என்ற குழப்பம் நிலவி வந்தது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினிக்கு ஜோடியாக குஷ்பு நடிக்கிறார் என்றும், இல்லை இல்லை மீனாதான் நடிக்கிறார் என்றும் தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் படத்தில் நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
குஷ்பு அறிவிப்பு
அதன்படி நடிகை குஷ்பு நடிகர் ரஜினிகாந்துடன் தலைவர் 168 படத்தில் இணைகிறார். இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்த சன்பிக்சர்ஸ், ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலின் பின்னணி இசையுடன் பாட்டாகவே பாடியிருக்கிறது.
முத்துப்பட பாடல்
இதேபோல் நடிகை மீனாவும் தலைவர் 168 படத்தில் இணைவதை சன்பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மீனாவுக்கு முத்து படத்தின் ஒருவன் ஒருவன் முதலாளி படத்தின் பின்னணி இசை பயன்படுத்தப்பட்டுள்ளது.
கீர்த்தி சுரேஷ்
இதேபோல் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைவதையும் வித்தியாசமாக அறிவித்திருக்கிறது சன்பிக்சர்ஸ். பின்னணி இசை, கிராஃபிக்ஸ் வொர்க் என அசத்தலாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது சன் பிக்சர்ஸ்.


Click it and Unblock the Notifications











