Lokesh Kanagaraj - லோகேஷ் கனகராஜ் - ரஜினி படத்தை லாக் செய்ய சன் பிக்சர்ஸ் போட்டிருக்கும் பக்கா ப்ளான்?
சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) லோகேஷ் கனகராஜும் ரஜினியும் இணையும் படத்தை கைப்பற்றுவதற்காக சன் பிக்சர்ஸ் திட்டம் ஒன்றை தீட்டியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ்தான் இப்போது கோலிவுட்டின் நம்பர் 1 இயக்குநர். இதுவரை அவர் எடுத்த நான்கு படங்களும் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக மாஸ்டர் படமும், விக்ரம் படமும் நூறு கோடி ரூபாயை அசலாட்டாக வசூலித்தன. அதிலும் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டராகி லோகேஷ் கனகராஜின் க்ராஃபை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இதனால் அவரது பயணம் இப்போது ஏறுமுகத்தில் இருக்கிறது.

லியோ லோகேஷ் கனகராஜ்: லோகேஷ் இப்போது லியோ படத்தை இயக்கிவருகிறார். படத்தின் 60 நாள்கள் ஷூட்டிங் சமீபத்தில் காஷ்மீரில் நடந்து முடிந்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போடப்பட்டு நடந்துவந்த ஷூட்டிங் இப்போது பையனூரில் நடந்துவருகிறது. இதனையடுத்து ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஷுட்டிங் நடக்கவிருப்பதாக தெரிகிறது.
அடுத்தது என்ன?: லியோ படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து படம் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஒட்டுமொத்த திரையுலகிலும் எழுந்திருக்கிறது. கைதி 2 படத்தை இயக்குவது எப்போதோ உறுதியாகிவிட்டாலும் அதற்கு முன்னதாக ரஜினியுடன் அவர் இணையவிருக்கிறார் என்ற தகவல்தான் சில வாரங்களாக ஹாட் டாபிக்காக வலம் வந்துகொண்டிருக்கிறது.
போட்டிப்போடும் நிறுவனங்கள்: அவர்கள் இருவரும் இணையும் படத்தை தயாரிப்பதற்கு கேஜிஎஃப், காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ், புஷ்பா, வீரசிம்ஹா ரெட்டி உள்ளிட்ட படங்களை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ், வாரிசு படத்தை தயாரித்த வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ், தமிழில் இருந்து சன் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகராக லோகேஷ் கனகராஜ்: இதற்கிடையே இயக்குநராக கலக்கிவரும் லோகேஷ் கனகராஜ் நடிகராகவும் களமிறங்கவிருக்கிறார். மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸில் சில நிமிட காட்சிகளில் நடித்த அவர், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் அனிருத்து, லோகேஷும் நடிக்கவிருக்கிறார்கள். இதில் லோகேஷ் கனகராஜுக்கு முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. மேலும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருப்பதாகவும் பேச்சு எழுந்திருக்கிறது.
இவ்வளவு சம்பளமா: ஏற்கனவே லோகேஷ் கனகராஜ், ரஜினி இணையும் படத்துக்கு லோகேஷ் கனகராஜுக்கு 40 கோடி ரூபாய் சம்பளத்தை தருவதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு 10 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டிருக்கிறதாம். இதனை கேள்விப்பட்ட கோலிவுட், நடிப்பதற்கே பத்து கோடி ரூபாய் சம்பளமா? பல படங்களில் நடித்திருக்கும் விஷாலுக்குக்கூட அவ்வளவு சம்பளம் இல்லையே என வாயை பிளந்திருக்கிறது.

இதுதான் ப்ளான்: ஆனால் லோகேஷ் கனகராஜ் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளம் கொடுப்பதற்கு பின்னணியில் ஒரு ப்ளான் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது லோகேஷ் - ரஜினி இணையும் படத்தை கைப்பற்றுவதற்கு சன் பிக்சர்ஸ் தீவிரமான முயற்சியில் இறங்கியிருக்கிறது. அதை கைப்பற்ற வேண்டுமெனில் லோகேஷ் கனகராஜின் சப்போர்ட்டும் அந்த நிறுவனத்துக்கு தேவைப்படுகிறது.
எனவே இப்படத்தில் 10 கோடி ரூபாய், ரஜினி படத்தை இயக்குவதற்கு 40 கோடி ரூபாய் என மொத்தம் 50 கோடி ரூபாயை லாக் செய்துவிட்டால் லோகேஷின் சப்போர்ட் தங்களுக்கு கிடைக்கும் என்பதால்தான் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முன் வந்திருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது. இந்தத் தகவலை அடுத்து லோகேஷ் கனகராஜுக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கிறது என்பதை கோடம்பாக்கம் உணர்ந்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











