திடீரென டிரெண்டாகும் Nano Banana: கூலி கதாபாத்திரத்தின் சிலையை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை: கடந்த சில மாதங்களுக்கு முன் ஜிப்லிபுகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டானி பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது, "Nano Banana" என்ற புதிய AI டிரெண்டாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில், பயனர்கள் தங்களை, செல்லப்பிராணிகளை, பிரபலங்களை அல்லது கற்பனை கதாபாத்திரங்களை சிறிய 3D சிலைகளாக உருவாக்குகின்றனர். இவை முகபாவனை, உடை, விவரங்கள் என அனைத்தும் சிறப்பாக இருப்பதால் இவை டிரெண்டாகி வரும் நிலையில், சன் தயாரிப்பு நிறுவனம் அதில் இணைந்து, கூலி படத்தின் நடித்த கதாபாத்திரங்களின் சிலை வடிவமைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் கடந்த மாதம் 14ந் தேதி வெளியானது. பான் இந்திய திரைப்படமாக உருவான இந்த படத்தில், கன்னட நடிகர் உபேந்திரா, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, மலையாள பட நடிகர் சௌபின் சாகிர், ஹிந்தி நடிகர் அமீர் கான், சத்யராஜ் , ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம், ரூ. 1000 கோடியை வசூல் செய்யும் என பலரும் கூறி வந்தனர்.

Coolie Rajinikanth Nano Banana
Photo Credit:

ஓடிடியில்: படம் வெளியான முதல் நாளில் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால் படத்தின் விமர்சனம் கலவையாகவே வந்ததாலும், படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருப்பதாக வந்த விமர்சனத்தால் படத்தின் வசூல்குறைந்தது. இதையடுத்து,படம் வெளியான 4 நாட்களில் ரூ. 400 கோடி வசூலை செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின் வசூல் குறித்த எந்த ஒரு தகவலையும் தயாரிப்பு நிறுவனம் அறிவிக்கவில்லை. தற்போது கூலி படம் வெளியாகி 26 நாட்கள் ஆகிவிட்டதால், செப்டம்பர் 11ந் தேதியான நாளை கூலி Prime Videoவில் வெளியாக உள்ளது. தியேட்டரில் படத்தை தவறவிட்டவர்கள்,ஓடிடியில் படத்தை பார்க்கலாம்.

"Nano Banana": இந்நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் கூலி படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களையும் "Nano Banana" டிரெண்டில் சிலையாக வடிவடைத்துள்ளது. அதில், ரஜினிகாந்த்தை பார்ப்பதற்கு யாரோ போல இருக்கிறார். ஆனால், நாகார்ஜூனா, அமீர் கான் போன்றவர்களின் சிலை அட்டகாசமாக வந்துள்ளது. இது இணையத்தில் டிரெண்டாகி உள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் இதை வைரலாக்கி, சிலை என்னவிலை என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X