உலகத்துல சிறந்த கனி கொய்யா கனி… யூடியூபில் வைரலாகும் நம்ம வீட்டு பிள்ளை டெலிட்டட் சீன்ஸ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் மூன்று வாரங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம், நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்றிருந்து நீக்கப்பட்ட இரண்டு காட்சிகளை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் நம்ம வீட்டு பிள்ளை. செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் வெளியானது. சிவகார்த்திகேயனின் முந்தைய படமான மிஸ்டர்.லோக்கல் படம் படுதோல்வி அடைந்ததால் இந்த படம் வெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் நலம் விரும்பிகள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

Sun Pictures has released deleted scenes from Namma Veettu Pillai Movie

அதே போல் இப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. முக்கியமாக ஏ A சென்டர்களைக் காட்டிலும், B மற்றும் C சென்டர்களில் வெளியான இப்படத்தை கிராம மக்கள் அனைவரும், குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசித்து வருகின்றனர். இதனால் படம் வெளியாக மூன்று வாரங்கள் கடந்து விட்டபோதும், இன்னமும் அனைத்து திரையரங்குகளிலும் கூட்டம் அலைமோதுகிறது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் தங்கையாக ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கிறார். மேலும், பாரதிராஜா, சூரி ,நட்டி ,சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்திருக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் பேட்ட படத்திற்கு பிறகு, இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சன் பிக்சர்ஸால் கடந் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. இதில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, இசையமைப்பாளர் டி.இமான் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர். சக்ஸஸ் மீட் புகைப்படங்களை தனது டீவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு படத்தை வெற்றி பெற செய்ததுக்கு நன்றி தெரிவித்து இருந்தார் டி.இமான்.

தற்போது, இப்படத்தின் வெளியிடப்படாத இரண்டு காட்சிகள் படக்குழுவினரால், யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அதை சன் டிவி தனது அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

இதில் நம்ம வீட்டு பிள்ளை டெலீட்டட் சீன் பார்ட் 1 என்று வெளியிட்டு இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது படத்தின் வெளியிடப்படாத பல காட்சிகளை தொடர்ந்து படக்குழு வெளியிடும் போல. இது இணையதள மற்றும் நம்ம வீட்டு பிள்ளை ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X