அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்..ஜெயிலர் படத்தில் இணைந்த பிரபலம்!
சென்னை : நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்திக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்து வருகிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு அண்ணாத்த திரைப்படம் வெளியானது. அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து, ஹிட் படங்களை கொடுத்த நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. அதில் ரத்தம் தோய்ந்த மெகா சைஸ் அரிவாள் ஒன்று தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது.

படத்தின் கதை
ஒரு ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த் ஜெயிலராக இருக்கிறார். இதில் ஜெயிலை உடைத்து வெளியேற கும்பல் ஒன்று திட்டம் தீட்டுகிறது. இதில் அனுபவம் வாய்ந்த ஜெயிலராக இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அந்தக் கும்பலின் திட்டத்தை எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் கதை.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் ஜெயிலர் படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று, இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது.

முக்கிய அப்டேட்
இந்நிலையில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாரின் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாக பரவி வருகிறது. இத்திரைப்படம் ஏப்ரல் 14ந் தேதி அதாவது தமிழ் புத்தாண்டு அன்று திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











