அல்லு அர்ஜுனை வைத்து அவதார் படம் எடுக்கப் போறாரா அட்லீ.. சன் பிக்சர்ஸின் 600 கோடி படம் ஆன் தி வே!

மும்பை: தமிழில் இயக்குநராக அறிமுகமான அட்லீ ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ஹிட்டானதைத் தொடர்ந்து பட தயாரிப்பிலும் இறங்கினார். அந்தவகையில் அவர் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரை வைத்து பேபி ஜான் என்ற படத்தை தயாரித்தார். அந்தப் படம் தமிழில் வெளியாகி ஹிட்டான தெறி படத்தின் ரீமேக். படம் தோல்வியை சந்தித்தது. இப்படிபட்ட சூழலில் அவரது அடுத்த பட அப்டேட் குறித்த வீடியோ வெளியாகியிருக்கிறது.

ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா, ஜெய் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ராஜா ராணி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. அந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது. அடுத்ததாக அவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று படங்களை தொடர்ந்து இயக்கினார். அந்த மூன்று படங்களில் பிகில் படத்தை தவிர்த்து மற்ற இரண்டு படங்களும் மெகா ஹிட்டாகின. அதிலும் மெர்சல் படம் விஜய்யின் கரியரில் வசூல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஹிந்தியில் அறிமுகம்: விஜய்யை வைத்து மூன்று படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக தமிழில்தான் பயணப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷாருக்கானை வைத்து ஹிந்தியில் ஜவான் படத்தை இயக்கினார். அந்தப் படம் தமிழ்நாட்டில் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் பாலிவுட்டில் சக்கை போடு போட்டது. மேலும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. தமிழிலிருந்து சென்று ஹிந்தியில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எடுத்த முதல் இயக்குநர் என்ற பெருமையை அட்லீ ஜவானில் பெற்றார்.

Allu Arjun Atlee

அடுத்த படம்: ஜவான் படத்துக்கு பிறகு அட்லீயின் மீதான கவனம் பாலிவுட்டில் பெருகியிருக்கிறது. அநேகமாக அடுத்ததும் ஷாருக்கானை வைத்து அவர் படம் இயக்குவார் என்றும்; அதனை முடித்து சல்மான் கானை வைத்து ஒரு படம் இயக்க திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அது எதுவும் உறுதியாகாத தகவல்கள்தான் என்றும் ஒரு பேச்சு ஓடிக்கொண்டிருந்தது. இதனையடுத்து அடுத்ததாக அவர் யாரை ஹீரோவாக வைத்து இயக்குவார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருந்தது.

அல்லு அர்ஜுனுடன் கூட்டணி: இந்நிலையில் அவரது அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி அட்லீ இயக்கத்தில் அடுத்ததாகா அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கிறார். படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அதுகுறித்த அறிவிப்பு வீடியோவும் அல்லுவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோவில் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறன், அட்லீ, அல்லு அர்ஜுன் ஆகிய மூன்று பேரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

என்ன ஜானரில் படம் வருகிறது: மேலும் அமெரிக்காவில் இருக்கும் கிராஃபிக்ஸ் ஸ்டூடியோவுக்கும் அல்லு அர்ஜுனும், அட்லீயும் செல்லும்படியான காட்சிகளும், படத்தின் கதையை அமெரிக்க டெக்னீஷியன்கள் புகழ்ந்துபேசும்படியும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றன. மேலும் தற்போது வெளியாகியிருக்கும் வீடியோவை வைத்து பார்க்கையில் இந்தப் படம் கண்டிப்பாக சைன்ஸ் ஃபிக்‌ஷன் ஜானரில் உருவாகும் என்பது உறுதியாகியிருக்கிறது. மேலும் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 600 கோடி ரூபாயை பட்ஜெட்டாக கொடுத்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஜவான் படத்தை மெகா ஹிட்டாக கொடுத்த அட்லீ இந்தப் படத்தையும் மெகா ப்ளாக் பஸ்டராகத்தான் கொடுப்பார். அதற்கான அறிகுறிகள் இப்போதே தெரிய ஆரம்பித்திருக்கின்றன என்று அவரது ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X