Dhanush: ராயனை சுமந்த தனுஷுக்கு இரண்டு செக்.. சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. இத்தனை கோடியா?
சென்னை: நடிகர் தனுஷின் ராயன் படம் நாளுக்கு நாள் பல சாதனைகளைப் படைத்து வருகின்றது. அதாவது ராயன் படம் வசூலில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக கூறப்படுகின்றது. படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இது தனுஷின் 50வது படம். இந்நிலையில் படம் மாபெரும் வெற்றி பெற்றதால், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன், ராயன் படத்தின் இயக்குநராகவும் நடிகராகவும் பணியாற்றிய தனுஷை நேரில் அழைத்து அவருக்கு இரண்டு செக் கொடுத்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் படத்தின் திரைக்கதைப் புத்தகம் ஆஸ்கார் விருது வழங்கும் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சைன்ஸ் நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் ராயன் படத்தின் திரைக்கதை புத்தகத்தை வைக்க தேர்வானது. ராயன் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் பிரியாணி விருந்து கொடுத்திருந்தார் தனுஷ்.

தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

வாட்டர் பாக்கெட்: இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டாவது பாடல் வாட்டர் பாக்கெட் பாடல். அந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ் ஆனபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வாட்டர் பாக்கெட் பாடலின் வீடியோ சாங் கடந்த 5ஆம் தேதி யூடியூபில் ரிலீஸ் செய்யப்பட்டது.

உசுரே நீ தானே: இந்தப் பாடல் இதுவரை யூடியூபில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. அதேபோல் உசுரே நீதானே பாடலின் வீடியோவை படக்குழு நேற்று அதாவது ஆகஸ்ட் 21ஆம் தேதி வெளியிட்டது. இது ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

இரண்டு செக்: இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தனுஷை நேரில் அழைத்து இரண்டு செக் பரிசாக கொடுத்துள்ளார். ஒரு செக் இயக்குநர் தனுஷுக்கும் மற்றொரு செக் நடிகர் தனுஷுக்கும் வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இது தொடர்பான தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனமே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு செக்கிற்கும் ஒரு கோடி என மொத்தம் இரண்டு கோடிகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications











