மார்ச் 10.. செம மாஸாக வரும் சூர்யா.. தியேட்டர்களை தெறிக்க விட தயாரான எதற்கும் துணிந்தவன்!
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் திரையரங்குகளில் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாகிறது.
இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ் ஆரம்பித்துள்ளது.
சமீபத்தில், வெளியான எதற்கும் துணிந்தவன் டீசர் 6 மில்லியன் வியூஸை கடந்து டிரெண்டான நிலையில், எதற்கும் துணிந்தவன் டிரைலர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் 10
வரும் பிப்ரவரி 24ம் தேதி அஜித் குமாரின் வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இன்னும் இரு வாரம் கழித்து மார்ச் 10ம் தேதி சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாக காத்திருக்கிறது. இந்த இரு படங்களும் நிச்சயம் தியேட்டர் ஓனர்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புரமோஷன் ஸ்டார்ட்
பீஸ்ட் படத்தின் புரமோஷனை அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம். முதலில் வெளியாகவுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தின் புரமோஷன்களை ஆரம்பித்து விடலாம் என நினைத்த சன் பிக்சர்ஸ் புதிய ஸ்டில்களுடன் ரிலீஸ் தேதியையும் மீண்டும் கன்ஃபார்ம் செய்து சூர்யா ரசிகர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளது.

காத்திருக்கும் ரசிகர்கள்
கடந்த இரு ஆண்டுகளாக சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட இரு நல்ல திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகாமல் ஒடிடியில் வெளியான நிலையில், எதற்கும் துணிந்தவன் தியேட்டர் ரிலீஸை தெறிக்கவிட சூர்யா ரசிகர்கள் ரொம்ப தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்த படமும் பான் இந்திய படமாக பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ள நிலையில், பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைலர் எப்போ
எதற்கும் துணிந்தவன் டீசர் 6 மில்லியன் பார்வைகளை கடந்து டிரெண்டாகி வரும் நிலையில், விரைவில் எதற்கும் துணிந்தவன் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் 1ம் தேதி எதற்கும் துணிந்தவன் டிரைலரை வெளியிட சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசை வெளியீட்டு விழா
எதற்கும் துணிந்தவன் படத்தில் இடம்பெற்றுள்ள வாடா தம்பி, உள்ளம் உருகுதய்யா, சும்மா சுர்ருன்னு உள்ளிட்ட பாடல்கள் ஹிட் அடித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவையும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என சூர்யா ரசிகர்கள் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு சன் பிக்சர்ஸ் ஏற்பாடு செய்வார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











