Jailer: உலகம் ஃபுல்லா ஹவுஸ்ஃபுல்.. சந்தோஷத்தில் சன் பிக்சர்ஸ் .. ஆனால், அதை சொல்லலயே?

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நிலையில், உலகம் முழுவதும் திரையிட்ட திரையரங்கம் முழுவதும் ஹவுஸ்ஃபுல் என சன் பிக்சர்ஸ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

அண்ணாத்த, பீஸ்ட், எதற்கும் துணிந்தவன் என சமீப காலமாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பல முன்னணி நடிகர்களின் படங்கள் சரியாக ஓடாத நிலையில், சன் பிக்சர்ஸை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது ஜெயிலர் திரைப்படம்.

Sun Pictures officially announced Jailer movie gets housefull shows at worldwide

கலாநிதி மாறன் ஹேப்பி: நிச்சயம் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்ததால் தால் கலாநிதி மாறன் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கு காசு செலவழித்து அப்படியொரு ஆக்ரோஷமாகவும் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் படத்தை பெரியளவில் ப்ரமோட் செய்த நிலையில், தற்போது புதிய வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

உலகளவில் ஹவுஸ்ஃபுல்: நம்முடைய டைகர் உலகம் முழுவதும் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வசூல் வேட்டை ஆடி வருகிறது என புதிய ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார் மூவரும் ஒன்றாக இருக்கும் ஒரு போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகா, அந்திரா, தெலங்கானா மற்றும் கேரளா என தென்னிந்தியா முழுவதும் ஜெயிலர் படத்துக்கு மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது.

அதிகாரப்பூர்வ வசூல் சொல்லலயே: வழக்கம் போல ஜெயிலர் படத்துக்கும் சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை சொல்லவில்லையே என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். லைகா நிறுவனம் பொன்னியின் செல்வன் படத்துக்கு முதல் நாளில் 80 கோடி உலகளவில் வசூல் என அறிவித்ததை போல உலகளவில் முதல் நாளில் ஜெயிலர் படத்தின் வசூலை சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தால் நல்லா இருந்திருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

முதல் நாள் வசூல் 90 கோடி என்றும் 100 கோடி என்றும் 70 கோடி என்றும் ஆளுக்கொரு தகவல்களை தெரிவித்து வருகின்றனர். 2 நாட்களில் 150 கோடி வசூலை ஜெயிலர் கடந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், சனி மற்றும் ஞாயிறு வசூல் 200 கோடி முதல் 250 கோடி வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X