’தளபதி 65’ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. இயக்குநர் யார் தெரியுமா?

சென்னை: தளபதி விஜய்யின் 65வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார் என்கிற அதிகாரப்பூர்வ அப்டேட் மாஸான வீடியோவுடன் வெளியாகி உள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை நெல்சன் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் யார்

இயக்குநர் யார்

தளபதி 65 படத்தை இயக்கப் போவது யார் என்கிற கேள்வி கடந்த சில மாதங்களாகவே வைரலாகி வருகின்றன. வெற்றிமாறன், சுதா கொங்கரா, ஏ.ஆர். முருகதாஸ், ஷங்கர், பேரரசு, பாண்டிராஜ், அட்லி, லோகேஷ் கனகராஜ் என ஏகப்பட்ட பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில், தற்போது இயக்குநர் நெல்சன் கன்ஃபார்ம் ஆகி உள்ளார்.

கோலமாவு கோகிலா இயக்குநர்

கோலமாவு கோகிலா இயக்குநர்

கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படங்களை இயக்கியுள்ள நெல்சன் தான் தளபதி 65 படத்தை இயக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ அப்டேட்டை சன் பிக்சர்ஸ் தற்போது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது. தளபதி விஜய்யை சந்தித்து நெல்சன் கதை சொன்னதும் விஜய்க்கு பிடித்துப் போக ஓகே சொல்லி விட்டார்.

லீக்கான போஸ்டர்

லீக்கான போஸ்டர்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கசிந்துள்ளது என சமூக வலைதளங்களில் #Thalapathy65 என்ற ஹாஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். டார்கெட் ராஜா என்பது தான் படத்தின் டைட்டில் என்பதும் வைரலானது. ஆனால், டைடில் குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

விஜய் தரிசனம்

தளபதி ரசிகர்களுக்கு விஜய் தரிசனம் கிடைக்கும் வகையில் சன் பிக்சர்ஸ் அறிவிப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது. கலாநிதி மாறன், தளபதி விஜய் மற்றும் நெல்சன் ஆகியோர் நடந்து வரும் அட்டகாசமான வீடியோவை வெளியிட்டு தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் இயக்கப் போகும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அனிருத் இசை

அனிருத் இசை

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கவுள்ள 65வது படத்திற்கு தமன் இசையமைப்பார் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது. இயக்குநர் நெல்சன் தளபதி விஜய்யை வைத்து படம் இயக்கவுள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மாஸ்டர் படத்திற்கும் அனிருத் தான் இசையமைப்பாளர்.

Recommended Video

விசுவின் மகள் கையில் எடுக்கிறார் |Samsaram Adhu Minsaram P-02 |Rewind Raja Ep -19 |Filmibeat Tamil
ஸ்னைபர் எக்ஸ்பெர்ட்டா

ஸ்னைபர் எக்ஸ்பெர்ட்டா

டார்கெட் ராஜா என்ற டைட்டில் தான் இந்த படத்திற்கு இருக்கும் என்பது தற்போது வெளியாகி உள்ள வீடியோவை பார்த்தாலும் கணிக்க முடிகிறது. ஸ்னைபர் துப்பாக்கி காட்டப்பட்ட நிலையில், ஸ்னைபர் எக்ஸ்பர்ட்டாக விஜய் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது தெரிய வருகிறது. புத்தாண்டுக்கு ஃபர்ஸ்ட் லுக் வெளியாக வாய்ப்புள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X