தொடர்ந்து 4 மாதங்களில் 4 மெகா ஸ்டார்களின் படங்கள்...ரிலீஸ் தேதியை உறுதி செய்த சன் பிக்சர்ஸ்

சென்னை : முன்னணி சினிமா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் ஒரே சமயத்தில் 4 மெகா ஸ்டார்களின் படங்களை தயாரித்து வருகிறது. இவை அனைத்துமே மெகா பட்ஜெட் படங்கள்.

மெகா ஸ்டார்களின் படங்கள் என்பதால் மாஸ், ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமில்லை. மிக விறுவிறுப்பாக தயாராகி வரும் இந்த மெகா ஸ்டார்களின் படங்கனை அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.

4 மெகா ஸ்டார் படங்கள்

4 மெகா ஸ்டார் படங்கள்

ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் படங்களை ஒரே நேரத்தில் தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ், இந்த படங்களை வரிசையாக 4 மாதங்களில் 4 படங்களையும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படங்களின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நவம்பரில் ரஜினியின் அண்ணாத்த

நவம்பரில் ரஜினியின் அண்ணாத்த

இந்த வரிசையில் முதல் ஆளாக இருப்பது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த ரஜினிகாந்த்தின் அண்ணாத்த படம். குஷ்பு, நயன்தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படம் கிராமத்து, பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தீபாவளி ட்ரீட்டாக நவம்பர் 4 ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக சன் பிக்சர்ஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது.

தீபாவளி ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ்

டைரக்டர் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தின் ஷுட்டிங் முழுவதும் ஏற்கனவே முடிக்கப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

டிசம்பரில் சூர்யா

டிசம்பரில் சூர்யா

இதற்கு அடுத்த படியாக டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன் படம் டிசம்பர் 24 ம் தேதி கிறிஸ்துமசை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுவும் கிராமத்து கதை தான். ஆனால் அழுத்தமான, சமுதாயத்திற்கு மெசேஜ் சொல்லும் படமாக அமைக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பீஸ் படம்

மாஸ்டர் பீஸ் படம்

இது பற்றி சமீபத்தில் ட்வீட் செய்த பாண்டிராஜ், சூரியனையும் மழையையும் பிரித்து வைக்க முடியாது. படத்தின் வேலைகள் முடியும் வரை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. மாஸ்டர் பீசாக நாங்கள் உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

தளபதி பொங்கல்

தளபதி பொங்கல்

இதைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படம் ஜனவரி 14 ம் தேதி பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். இந்த ஆண்டு பொங்கலுக்கு மாஸ்டர் வெளியிடப்பட்டதை போல் அடுத்த ஆண்டு பீஸ்ட் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் அடுத்த பொங்கலும் தளபதி பொங்கலாக இருக்கும் என்கின்றனர் விஜய் ரசிகர்கள்.

டெல்லியில் பீஸ்ட் குழு

டெல்லியில் பீஸ்ட் குழு

அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் பீஸ்ட் படமும் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு இந்த வாரம் டெல்லி செல்ல உள்ளது. செப்டம்பர் இறதி வரை டெல்லியில் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாம்.

திருச்சிற்றம்பலம்

திருச்சிற்றம்பலம்

கடைசியாக தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தை பிப்ரவரி 11 ம் தேதி ரிலீஸ் செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளதாம். சமீபத்தில் இந்த படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஃபோட்டோக்களும் ரிலீசாகி, ஆன்லைனில் வைரலாகின.

தயாராகும் ரசிகர்கள்

தயாராகும் ரசிகர்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களில் ரிலீஸ் தேதி கிட்டதட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதால் இந்த ஸ்டார் நடிகர்களின் ரசிகர்கள் தங்களின் ஃபேவரைட் ஹீரோக்களின் படங்களை கொண்டாட இப்போதே தயாராகி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X