Jailer Audio Launch: ரஜினிக்கு போட்டி ரஜினி தான்..வேறு யாரும் இல்லை.. கலாநிதி மாறன் பேச்சு!

சென்னை: ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் பேசிய கலாநிதி மாறன் ரஜினிக்கு போட்டி ரஜினிதான் வேறுயாரும் இல்லை என்றார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்வள ஜெயிலர் படம் ஆகஸ்ட்10ந் தேதி வெளியாக உள்ளது.

Sun pictures producer Kalanithi maran speech in jailer audio launch

ஜெயிலர் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா, நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், சன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

அனிருத் மாஸ்: ஜெயிலர் படத்தில் மாஸ் ஹிட்டடித்த ஹுக்கும் பாடலுடன் மாஸ் என்ட்ரி கொடுத்திருந்த அனிருத், நேரலையில் அந்த பாடலை வெறித்தனமாக பாடினார். அரங்கை தெறிக்கவிட்ட அனிருத்தின் பாடலை கேட்ட ரசிகர்கள் ஒன்ஸ் மோர் கேட்டு விசில் அடித்து அலப்பறை செய்தனர். ரசிகர்களுக்காக மீண்டும் அனிருத் பாடினார்.

கலாநிதி பேச்சு: இதையடுத்து, பேசிய கலாநிதி மாறன், உண்மைய சொல்லனும்னா நான் இன்னும் ஜெயிலர் படத்தை பார்க்கவில்லை. ஆனால், படம் பார்த்த அத்தனை பேரும் படம் நல்ல இருக்குனு சொல்லிட்டாங்க. இந்த படத்தோட கதைய முதல்ல கேட்டது ரஜினி சார் தான். கதை எப்படி சார் இருக்குனு அவர் கிட்ட கேட்டேன். அதுக்கு அவர், கதை நல்ல இருக்கு, நெல்சன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொன்னார். இதே போலத்தான் தான் எந்திரன் படத்திற்கும் சொன்னார்.

5 தலைமுறையின் ரசிகன்: ரஜினிகாந்திற்கு 5 தலைமுறையினர் ரசிகராக இருக்கிறார்கள். மூன்று வயசு குழந்தைக்கூட ரஜினி சார் பாட்டுக்கு டான்ஸ் ஆடுது. ரஜினிக்கு போட்டி சிவாஜி ராவ் தான். ரஜினி சாருக்கு போட்டி ரஜினி சார் தான். வேற யாரும் இல்ல. ரஜினி சாருக்கு இப்போ 72 வயசு ஆகுது. இப்பவும் பல தயாரிப்பாளர்கள் அவர் பின்னாடி வரிசையில் நிக்குறாங்க. அதே மாதிரி உங்களுக்கும் நின்னா அப்போ சொல்லுங்க நான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று. அது வரைக்கும் இந்திய திரையுலகிலே ரஜினி சார் மட்டும் தான் சூப்பர் ஸ்டார் என்றார். கலாநிதி மாறனின் இந்த பேச்சுக்கு அரங்கில் விசில் மற்றும் கைத்தட்டல் சத்தம் காதை பிளந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X