ஒரே பாடல்... மூன்று இசையமைப்பாளர்கள்... மேக்கிங் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

சென்னை : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.

Recommended Video

கணவன் Pradeep குறித்து பதிவிட்ட Pavani | Pavani First Post about her Husband Pradeep

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் 3 பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றுள்ளன.

எதற்கும் துணிந்தவன் படம்

எதற்கும் துணிந்தவன் படம்

நடிகர் சூர்யா, பிரியங்கா அருள் மோகன் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ள படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் டைரக்ட் செய்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

அடுத்தடுத்த வெற்றி படங்கள்

அடுத்தடுத்த வெற்றி படங்கள்

சூர்யாவின் சூரரைப்போற்று, ஜெய்பீம் படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு படங்களும் நேரடியாக ஓடிடியில் ரிலீசாகியது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரிப்பு

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இதில் வாடா தம்பி என்ற பாடல் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

வாடா தம்பி பாடல்

வாடா தம்பி பாடல்

இந்தப் பாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பை அடுத்து தற்போது பாடலின் மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த பாடலில் இமான் இசையமைக்க ஜிவி பிரகாஷ் மற்றும் அனிருத் இருவரும் பாடலை பாடியுள்ளனர். சில நொடிகளே காணப்படும் இந்த வீடியோவை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

உற்சாகத்துடன் இசையமைப்பாளர்கள்

உற்சாகத்துடன் இசையமைப்பாளர்கள்

இந்தப் பாடலில் மூன்று இசையமைப்பாளர்களும் இணைந்து மிகுந்த உற்சாகத்துடன் பாடலை வடிவமைத்துள்ளனர். ஏற்கனவே லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ள இந்த பாடல் மிகுந்த உற்சாகத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த மேக்கிங் வீடியோவும் சிறப்பாக காணப்படுகிறது.

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா கட்டுப்பாடுகள்

கொரானா பரவலால் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது மேலும் திரையரங்குகளிலும் 50 சதவிகித பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படம் திட்டமிட்டபடி வரும் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆயினும் நிலைமை கட்டுக்குள் வந்து படம் திட்டமிட்டபடி ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X