விஜய்யோட பீஸ்ட் படம்... சன் பிக்சர்ஸ் செய்த சிறப்பான செயல்... ரசிகர்கள் ஹேப்பி!

சென்னை :நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். இந்தப்படம் கோடை கொண்டாட்டமாக வரும் ஏப்ரல் 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையொட்டி தயாரிப்பு தரப்பு சிறப்பான பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படம் சிறப்பான வகையில் ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. தற்போது மாஸ்டர் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்துள்ளார்.

ஏப்ரல் 13ல் பீஸ்ட் ரிலீஸ்

ஏப்ரல் 13ல் பீஸ்ட் ரிலீஸ்

படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வரும் ஏப்ரல் 13ம் தேதி படம் கோடை மற்றும் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

அனிருத் இசையில் இரண்டு பாடல்களும் கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. அடுத்ததாக படத்தின் டீசருக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. அனைத்து மொழிகளிலும் படத்தின் பிரமோஷனை சிறப்பாக செய்ய சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது.

5 மொழிகளில் வெளியான போஸ்டர்கள்

5 மொழிகளில் வெளியான போஸ்டர்கள்

இந்நிலையில் தற்போது படத்தின் போஸ்டர்களை அனைத்து மொழிகளிலும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் போஸ்டர்களில் படத்தின் ரிலீஸ் குறித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் போஸ்டரில் விஜய்யின் சிறப்பான கெட்டப்பை பார்க்க முடிகிறது. இந்தப் படத்திற்காக தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய அளவில் மற்ற மாநில ரசிகர்கள் காத்துள்ள நிலையில் இந்தப் போஸ்டர்கள் அவர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

பான் இந்தியா நாயகன்

பான் இந்தியா நாயகன்

நடிகர் விஜய்க்கு மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இதையொட்டியே தற்போது பீஸ்ட் படம் தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. விஜய் பான் இந்தியா நாயகனாகவும் மாறியுள்ளார். பீஸ்ட் படம் வெளியாகும்போது தமிழகத்தில் மட்டுமின்றி, இந்திய அளவில் பீஸ்ட் திருவிழாவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X