Jailer - பக்கா மாஸ் ஜெயிலர் காட்சி.. அட அட நெல்சன் திலீப்குமார் விளக்குவதை ரஜினி எப்படி கேட்கிறார் பாருங்க

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மெகா ஹிட்டானது. அந்த ஹிட் கொடுத்த உற்சாகத்தோடு தற்போது த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் ரஜினி; அதனை முடித்துவிட்டு மாரி செல்வராஜ் அல்லது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கலாம் என பேச்சு ஒன்று எழுந்திருக்கிறது.

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நெல்சன் திலீப்குமார் முதல் படத்திலேயே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார். முதல் படமே ஹீரோயினை மையமாக வைத்து இயக்கிய மிகச்சில இயக்குநர்களில் நெல்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்சன் திலீப்குமார் முதல்முதலாக சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் படம் ஆரம்பகட்டத்திலேயே நின்றுபோய்விட்டது.

Sun Pictures Released Rajinis Jailer Movie Making Video

மீண்டும் சின்னத்திரையில்: முதல் படம் ஹிட்டாகாமல் போனாலே அவர் ராசியில்லாத இயக்குநர் என முத்திரை குத்தும் கோலிவுட்டில் முதல் படம் கைவிடப்பட்டால் மேற்கொண்டு அந்த இயக்குநருக்கு பல முத்திரைகளை குத்தும். இருந்தாலும் அதையெல்லாம் காதில் ஏற்றிக்கொள்ளாத நெல்சன் மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்குவதற்கு சென்றுவிட்டார்.

கோலமாவு கோகிலா: பல வருடங்களுக்கு பிறகு நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன். அந்தப் படத்தில் அவருடன் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார். டார்க் காமெடி ஜானரில் உருவான அந்தப் படம் மெகா ஹிட்டாகி நூறு கோடி ரூபாயை வசூலித்தது. இதனால் நெல்சன் திலீப்குமார் முக்கியமான இயக்குநர்கள் வரிசையில் நகர்ந்தார்.

பீஸ்ட்: சூழல் இப்படி இருக்க மூன்றாவது படமாக விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். கண்டிப்பாக விஜய்யை வைத்து ஒரு மெகா ஹிட்டை கொடுத்துவிடுவார் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் படம் படுதோல்வியடைந்தது. இதற்கிடையே பீஸ்ட் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோதே ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க கமிட்டானார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரித்த அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

மெகா ஹிட்: பீஸ்ட் படத்தால் சந்தித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நெல்சன் திலீப்குமாரும்; தர்பார், அண்ணாத்த ஆகிய இரண்டு படங்களின் தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க ரஜினிகாந்த்தும் முழு மூச்சாக ஜெயிலரில் பணியாற்றினார்கள். அவர்கள் எதிர்பார்த்தபடியே படம் மெகா ஹிட்டானது. முக்கியமாக ரஜினிகாந்த்துக்கு தேவையான மாஸ் காட்சிகள், க்ளாஸ் காட்சிகள் என ஒரு சூப்பர் காக்டெயிலாக நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தை பிரசெண்ட் செய்திருந்தார்.

மேக்கிங் வீடியோ: இந்த சூழலில் ஜெயிலர் படத்தில் மாஸ் காட்சி ஒன்றின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அப்படத்தில் ஒரு ட்ரக்கை அதன் சக்கரங்களில் ரோப் கட்டி பாலத்தில் இருந்தபடி கவிழ்க்கும் காட்சி ஒன்று இடம்பெற்றிருக்கும். அது தியேட்டரில் பெரும் ரெஸ்பான்ஸை பெற்றது. வசனம் எதுவும் இல்லாமல் ரஜினிகாந்த்தின் ஸ்டைலில் அந்த காட்சி படு மாஸாக அமைந்திருக்கும். இந்நிலையில் அந்தக் காட்சி எப்படி உருவாக்கப்பட்டது என்பது தொடர்பான வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

அதில், அந்தக் காட்சியை நெல்சன் திலீப்குமார் மும்முரமாக விளக்குகிறார். அதனை உன்னிப்பாக கவனிக்கும் ரஜினிகாந்த் பிறகு அதில் நடித்துவிட்டு மானிட்டரை பார்த்து நெல்சனை பாராட்டுவது போன்று இருக்கிறது. இந்த வீடியோ இப்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X