தட்டிக் கொடுத்து வேலை வாங்கினார்... இந்த மூவர் கூட்டணி சொல்றத கேளுங்க!
சென்னை : நடிகர் சூர்யா, பிரியங்கா மோகனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் ரிலீசாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்.
படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தில் நடித்துள்ள மூவர் கூட்டணி படம் குறித்து வெளியிட்டுள்ள வீடியோவை சன் பிக்சர்ஸ் தன்து ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

எதற்கும் துணிந்தவன் படம்
நடிகர் சூர்யா, பிரியங்கா மோகனன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், புகழ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன.

கிராமத்து பின்னணி
பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் கிராமத்து பின்னணியில் படமாக்கப்பட்டுள்ளது. பாலியல் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியிடப்பட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் இன்றைய தினம் வெளியாகியுள்ள படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

சிறப்பான கதாபாத்திரங்கள்
படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் சிறப்பான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் திரைக்கதையும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் கடந்த ஜெய்பீம் படம் அமேசான் ப்ரைமில் வெளியான நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது அவரது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மூவர் கூட்டணி
படத்தில் புகழ், ராமர், தங்கதுரை உள்ளிட்டவர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது அவர்கள் மூவரும் படம் குறித்த தங்களது குஷியை வீடியோ மூலம் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இயக்குநர் குறித்து பெருமை
இவர்கள் மூவரும் படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் இயக்குநர் பாண்டிராஜ் தங்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கியதாகவும் பெருமை தெரிவித்துள்ளனர். தாங்கள் அதிகமான டேக் வாங்கினாலும் பொருமையாக அவர் இருந்ததையும் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

ஜாலியாக பார்க்கலாம்
வீடியோவில் பேசிய தங்கதுரை ஒரு கட்டத்தில் சூட்டிங் ஸ்பாட் என்பதற்கு பதில் சூட்டிங் ஸ்வாட் என்று கூற, அதை மற்றவர்கள் கலாய்த்ததும் நடந்தது. அவருக்கு ஸ்பாட் என்பது வராது என்பதையும் அவர்கள் கலாய்த்தனர். ஜாலியாக குடும்பத்துடன் இந்தப் படத்தை பார்க்கலாம் என்றும் அவர்கள் கூறினர்.


Click it and Unblock the Notifications











