இந்த சவுண்டு போதுமா? ஃபைட்டர் ஜெட், தோட்டாக்கள் பாயும் சத்தம் என தெறிக்கும் பீஸ்ட் புதிய புரமோ!

சென்னை: வீரராகவனின் பீஸ்ட் உலகின் சத்தங்கள் அடங்கிய புதிய அட்டகாசமான புரமோவை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

பெரிய அளவிலான புரமோஷன்களை செய்யாவிட்டாலும், விஜய் ரசிகர்களுக்காக புதிய புதிய காட்சிகள் அடங்கிய புரமோஷன்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வெறியேற்றி வருகிறது.

பீஸ்ட் படத்திற்கு அனிருத் போட்டுள்ள பிஜிஎம் மேஜிக்கை தியேட்டரில் நாளை ரசிகர்கள் கொண்டாட போகின்றனர்.

4 மணிக்கு ஷோ

4 மணிக்கு ஷோ

ஏப்ரல் 13ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பல திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகிறது. பட்டாசு, டிஜே, செண்டை மேளம் என ஏகப்பட்ட ஏற்பாடுகளை ரசிகர்களுக்காக பிரபல திரையரங்குகள் ஏற்பாடு செய்துள்ளன. மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை 100 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் ரசிகர்கள் ரகளை செய்து பார்க்க போகின்றனர்.

சம்பவங்கள் இருக்குமா

சம்பவங்கள் இருக்குமா

அஜித்தின் வலிமை படம் ரிலீசான போது, அஜித் ரசிகர்கள் பால், தயிர் உள்ளிட்டவற்றை திருடியது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதே போல படத்தின் FDFS தாமதம் ஆனதால் சேலத்தில் உள்ள திரையரங்கின் கண்ணாடிகள் மற்றும் ஷட்டரை உடைத்து அஜித் ரசிகர்கள் பரபரப்பை கிளப்பினர். இந்நிலையில், பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஏகப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விஜய் ரசிகர்களுக்கும் இதுபோன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபடக் கூடாது என்கிற எச்சரிக்கைகளும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பாக விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பீஸ்ட் உலகின் சவுண்ட்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஃபைட்டர் ஜெட் சத்தம், வெடிகுண்டு வெடிக்கும் சத்தம், தோட்டாக்கள் தெறிக்கும் சத்தம், கத்தி கிழிக்கும் சத்தம் என ஏகப்பட்ட சவுண்ட் எஃபெக்ட்ஸ்க்காக மெனக்கெட்டு இருப்பதை உணர்த்தும் வகையில் இந்த புதிய புரமோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

விஜய் மேனரிஸம்

விஜய் மேனரிஸம்

போக்கிரி படத்தின் எஃபெக்ட் பீஸ்ட் படத்தில் இருக்கும் என்றும், விஜய் எப்படி இயல்பாக ஆஃப் ஸ்க்ரீனில் இருப்பாரோ அதை மனதில் வைத்தே வீரராகவனை நெல்சன் உருவாக்கியதாகவும் பேட்டியில் அம்பலப்படுத்தி இருந்தார். இந்நிலையில், தற்போது வெளீயாகி உள்ள பீஸ்ட் படத்தின் புதிய புரமோ வீடியோவின் இறுதியில் விஜய் பண்ணும் அந்த புயலுக்கு முன் அமைதி போன்ற ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் மேனரிஸம் டிரெண்டாகி வருகிறது.

டீசரா விட்டு இருக்கலாம்

டீசரா விட்டு இருக்கலாம்

இந்த வீடியோவை பார்த்த விஜய் ரசிகர்கள் டிரைலர் விட்டதற்கு முன்பாக பீஸ்ட்டின் டீசராக இதை மட்டும் விட்டிருந்தால் வேற லெவலில் ரெக்கார்டு படைத்திருக்கும் என்றும், விஜயராகவனின் வேட்டை வெறித்தனமாக இருக்கப் போகிறது திரையரங்குகளில் என படத்தை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

இந்த சவுண்டு போதுமா

இந்த சவுண்டு போதுமா

இந்த சவுண்டு போதுமா என விஜய் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் அனிருத் சொல்வது போல இந்த புரமோ இருப்பதாகவும், இதை விட அதிக சவுண்டை நாளை தியேட்டர்களில் கேட்க வாங்க அனி ப்ரோ என விஜய் ரசிகர்கள் அனிருத்தை பாராட்டி சவால் விட்டு வருகின்றனர். பீஸ்ட் படத்தின் பாடல்கள் மற்றும் பேக்ரவுண்ட் என அனிருத் வேற லெவல் உழைப்பை போட்டிருப்பதை நடிகர் விஜய்யும் பேட்டியில் பாராட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X