ப்பா.. என்னவொரு ஹேண்ட்ஸம்.. சிலுக்கு சட்டையில் கலக்கும் விஜய்.. வைரலாகும் தளபதி 65 பூஜை ஸ்டில்ஸ்!
சென்னை: நேரம் கடத்தாமல் ரசிகர்களின் ஆர்வத்தை அறிந்து உடனடியாக தளபதி 65 படத்தின் பூஜை புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் கிரே கலர் சிலுக்கு சட்டையில் பூஜையில் கலந்து கொண்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் புதிய போஸ்டர்கள் அடிப்பதும், டிபிக்களை மாற்றுவதுமாக அமர்க்களப்படுத்தி வருகின்றனர்.
நாயகி பூஜா ஹெக்டே வேறு ஒரு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால், இந்த பூஜையில் கலந்து கொள்ளவில்லை.

அழகு தளபதி
தளபதி 65 படத்திற்காக சூப்பர் ஹேண்ட்ஸம் ஆக மாறியுள்ள நடிகர் விஜய்யின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்து வருகின்றன. கிரே கலர் சிலுக்கு சட்டை அணிந்து கொண்டு செம ஸ்மைல் கொடுக்கும் தளபதி விஜய்யின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சுத்திப் போடுங்க சங்கீதா
மேலும், தளபதி விஜய் இப்படி படு ஸ்மார்ட்டாகவும் ஹேண்ட்ஸமாகவும் மாறியுள்ளதை பார்த்த ரசிகர்கள் தளபதி வீட்டுக்கு வந்த உடனே சுத்திப் போடுங்க சங்கீதா என கோரிக்கை கமெண்ட்டுகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தனக்கே உரிய அமைதி மற்றும் புன்னகையுடன் விஜய் அசத்துகிறார்.

பூஜை போட்டாச்சு
எளிமையான முறையில் பெருங்களத்தூரில் உள்ள சன் ஸ்டூடியோவில் தளபதி 65 திரைப்படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. படக்குழுவினருடன் நடிகர் விஜய் இருக்கும் பட பூஜை போட்டோக்களை சன் பிக்சர்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறது. இயக்குநர் நெல்சன் மிகவும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் காணப்படுகிறார்.

கடைசி ரோவில் கவின்
விடிவி கணேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த பட பூஜையில் கலந்து கொண்டனர். நடிகரும் பிக் பாஸ் பிரபலமுமான கவின் கடைசி ரோவில் இருக்கும் போட்டோ கவின் ஆர்மியினரை கொண்டாட்ட மோடுக்கு மாற்றி உள்ளது. மேலும், தளபதி 65 படத்தில் கவின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவல் கசிந்து வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











