மீண்டும் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்..
ஆட்சி மாறியபின்னர் அமைதி காத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மீண்டும் பழைய வேகத்தோடு களமிறங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் குழுமத்தின் ஒரு அங்கமான சன் பிக்சர்ஸ் காதலில் விழுந்தேன் தொடங்கி மங்காத்தா வரை பல திரைப்படங்களை வெளியிட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை தயாரித்து வெளியிட்ட சன் பிக்சர்ஸ் 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளால் சில காலம் படங்களை வெளியிடவில்லை.

அஜீத் நடித்த மங்காத்தா
துரை தயாநிதி தயாரித்த மங்காத்தா திரைப்படத்தை பின்னர் வெளியிட்ட சன் பிக்சர்ஸ் தற்போது மீண்டும் அதே வேகத்தோடு களமிறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையில் ஒருநாள்
இப்போது சென்னையில் ஒருநாள், தனுஷ் தயாரித்துள்ள எதிர்நீச்சல் ஆகிய படங்களின் விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் பெற்றுள்ளது.

குட்டிப்புலி மீது கண்
சசிகுமார், லட்சுமி மேனன் நடித்து வரும் குட்டிப்புலி படத்தினை கைப்பற்றவும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை புது இயக்குநர் முத்தையா டைரக்ட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











