விஜய்க்காக திடீரென சன் பிக்சர்ஸ் பார்த்த வேலை.. ஸ்டாலின் கண்ணில் பட்டால் என்னாவது.. ரசிகர்கள் கலாய்!

சென்னை: நடிகர் விஜய் சினிமாவில் இருந்து முற்றிலுமாக விலகி முழுநேரம் அரசியலில் கவனம் செலுத்தப்போவதாக அறிவித்தார். இதனால் தனது ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தினை தமிழக வெற்றிக் கழகமாக மாற்றினார். இப்படியான நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டினை நடத்தி முடித்தார். தற்போது தனது கடைசி படமான தளபதி 69 படத்தில் கவனம் செலுத்தி வருகின்றார். இந்தப் படத்தினை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆனதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் சிறப்பு வீடியோவை பகிர்ந்துள்ளது.

நடிகர் விஜய் நேரடியாக அரசியல் வசனங்கள் பேசி நடித்த படம் என்றால் அது கத்தி. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் இருந்துதான் விஜய் நேரடியாக அரசியல் வசனங்களைப் பேசி நடித்தார். இந்தப் படத்திற்குப் பின்னர் மெர்சல் படத்திலும் பேசியிருந்தார். ஆனால் முழுக்க முழுக்க முழுநீள அரசியல் படத்தில் அவர் நடித்த படம் என்றால் அது சர்கார் படத்தினைக் கூறலாம்.

vijay sarkar thalapathy vijay

சர்கார் படம் முழுக்க முழுக்க அரசியல் படமாக அமைந்தது. குறிப்பாக அப்போது ஆட்சியில் இருந்த அதிமுகவை நேரடியாகவே சாடியது. படம் முழுக்க திராவிடக் கட்சிகளுக்கு எதிரான வசனங்களாகவே அமைந்தது. மேலும் படத்தில் விஜய் தேர்தலில் நிற்பதைப் போலவும், முதல் தேர்தலிலேயே ஆளும் கட்சிக்கு எதிராக வெற்றி பெறுவதைப் போலவும் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.

vijay sarkar thalapathy vijay

படக்குழு: ஏ.ஆர். ரஹ்மான் இசையில் படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், ராதாரவி, வரலஷ்மி சரத்குமார் என படம் முழுக்க நட்சத்திரப் பட்டாளங்களாகவே இருந்தார்கள். படத்தினை திமுகவுக்கு மிகவும் நெருக்கமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. படம் வெளியான பின்னர் படத்தின் சில காட்சிகள், விமர்சனத்திற்கு ஆளானது.

vijay sarkar thalapathy vijay

முதலமைச்சர்: படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசும்போது, சர்கார் படத்தில் நான் முதலமைச்சராக நடிக்கவில்லை. நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன் எனக் கூறினார். விஜய் கூறியதைப் போலவே படத்தில் விஜய் முதலமைச்சராக நடிக்கவில்லை. அதேபோல் தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராகவேண்டும் என தனது நடிப்பினை முழுவதுமாக விட்டுவிட்டு அரசியலில் களமிறங்கியுள்ளதால், விஜய் ரசிகர்கள் குஷியாக உள்ளார்கள். சர்கார் படம் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றிப் படமாக மாறியது. சர்கார் படத்தின் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது.

கமெண்ட்: தனது முதல் மாநாட்டில் திமுகவினை விஜய் நேரடியாகவே விமர்சித்துப் பேசினார். இப்படியான நிலையில் திமுகவுக்கும் மிகவும் நெருக்கமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், சர்கார் படம் வெளியாகி இன்றுடன் 6 ஆண்டுகள் ஆகின்றது என வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் சிலர் காலாய்க்கும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர். குறிப்பாக ஒரு இணையவாசி, "ஸ்டாலின் மைண்ட் வாய்ஸ்: இதெல்லாம் எதிர்கட்சிக்காரங்க பார்த்தா என்ன நினைப்பாங்க" என முதலமைச்சர் ஸ்டாலினை இணைத்து கமெண்ட் செய்துள்ளார்.

vijay sarkar thalapathy vijay

More from Filmibeat

Read more about: vijay sarkar thalapathy vijay
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X