வெடிக்கத் தயாராகும் தோட்டாக்கள்.. தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் வீடியோ வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சென்னை: தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் நாளை மாலை வெளியாகிறது என்கிற அசத்தல் அப்டேட்டுடன் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு இருக்கிறது.
கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ள இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 65.
இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

தளபதி பிறந்தநாள்
ஜூன் மாதம் வந்தாலே தளபதி ரசிகர்களுக்கு திருவிழா தான். ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் காணப் போகும் நடிகர் விஜயை மாதம் முழுவதும் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். பிறந்தநாள் டிபிக்கள், மாஷ் அப்கள், வீடியோ பாடல்கள் என மாஸ் கிளப்பி வருகின்றனர்.

தியேட்டரில் மாஸ்டர்
நடிகர் விஜய்யும் எப்போதுமே தனது ரசிகர்களை காக்க வைப்பதே இல்லை. எந்த சூழலாக இருந்தாலும் ரசிகர்களின் சந்தோஷம் தான் முக்கியம் என அதற்கே முக்கியத்துவம் கொடுத்து வருபவர். ஒடிடி வியாபாரங்கள் சூடுபிடித்து இருந்த போதிலும், ரசிகர்களுக்காக மாஸ்டர் படத்தை தியேட்டரிலேயே ரிலீஸ் செய்தார்.
Recommended Video

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக்
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாட்ட மூடில் காத்திருக்கும் ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக தற்போது வெறும் முதல் ஷெட்யூல் மட்டுமே முடிந்துள்ள தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் நாளை வெளியிட அனுமதி அளித்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் வீடியோ
புரமோஷன் என்று வந்து விட்டால் சன் பிக்சர்ஸை அடித்துக் கொள்ள தமிழ் சினிமாவில் ஆள் இல்லை என்றே சொல்லலாம். தளபதி விஜய்யின் பிறந்தநாளை கொண்டாட காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்கிற அப்டேட் வீடியோவை சன் பிக்சர்ஸ் இப்போ வெளியிட்டு இருக்கிறது.

தோட்டா தெறிக்க
தோட்டா தெறிக்க தெறிக்க.. துப்பாக்கியில் இருந்து புல்லட்டுகள் பறக்கும் அந்த வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ், கொஞ்சம் வெயிட் பண்னு மாப்பி.. நாளை மாலை 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் டான்னு வந்துடும் என ட்வீட் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











