பீஸ்ட் டிரைலருக்கு இப்படி வெயிட் பண்றது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க.. எக்ஸ்க்ளூசிவ் ஸ்டில்!

சென்னை: நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக போகிறது என மார்ச் 30ம் தேதி அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், சன் பிக்சர்ஸ் மற்றுமொரு பிரத்யேக பீஸ்ட் படத்தின் ஸ்டில்லை வெளியிட்டு விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படம் பீஸ்ட் மோடில் இருக்குமா? அல்லது ஜாலியோ ஜிம்கானா மோடில் இருக்குமா? என புரியாமல் விஜய் ரசிகர்களே குழப்பத்தில் உள்ளனர்.

ஜெட் ஃபிளைட் ஓட்டுறாரா விஜய்

ஜெட் ஃபிளைட் ஓட்டுறாரா விஜய்

பீஸ்ட் படத்தின் டிரைலர் வரும் ஏப்ரல் 2ம் தேதி மாலை 6 மணிக்கு வரும் என சன் பிக்சர்ஸ் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. அப்போது அவர்கள் வெளியிட்ட மோஷன் போஸ்டரில் நடிகர் விஜய் ஜெட் ஃபிளைட் ஓட்டுவது போல மாஸ்க் அணிந்த புகைப்படம் மற்றும் பின்னணி இசையில் ஜெட் பறக்கும் சவுண்ட் இருந்ததால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் பீஸ்ட் டிரைலருக்காக காத்திருக்கின்றனர்.

என்ன கதை

என்ன கதை

பீஸ்ட் படத்தின் கதை காமெடியாக இருக்குமா? அல்லது சீரியஸாக இருக்குமா என ரசிகர்கள் ரொம்பவே குழம்பிப் போயுள்ளனர். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை போலவே இந்த படமும் டார்க் காமெடி படம் தான் என்பதை தற்போது வெளியாகி உள்ள புதிய பிரத்யேக போஸ்டர் தெளிவுபடுத்தி உள்ளது.

சன் பிக்சர்ஸே வெயிட்டிங்காம்

சன் பிக்சர்ஸே வெயிட்டிங்காம்

பீஸ்ட் படத்தின் பிரத்யேக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, "நாங்களும் உங்கள மாதிரி பீஸ்ட் டிரைலருக்கு வெயிட்டிங் நண்பா" என சன் பிக்சர்ஸ் தற்போது ட்வீட் போட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விஜய் ரசிகர்கள் அடித்த அடி அப்படி என ரசிகர்கள் அந்த ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

கடைசி இடத்தில் விஜய்

கடைசி இடத்தில் விஜய்

ஷாப்பிங் மால் ஹைஜாக் செய்யப்பட்ட நிலையில், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ், செக்யூரிட்டி, சுனில் ரெட்டி என ஒருவர் பின் ஒருவராக மறைந்து நிற்க, சுனில் ரெட்டிக்கு பின்னாடி நடிகர் விஜய் செம க்யூட்டாக ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கும் பக்காவான போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தில் செம ஃபன் ரைடு இருப்பது தற்போது கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

எதிர்பார்ப்பை குறைக்க

எதிர்பார்ப்பை குறைக்க

பீஸ்ட் டிரைலர் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில், டாப் கன் மேவரிக் போன்ற படம் என ரசிகர்கள் எதிர்பார்த்து ஏமாந்து போய் விடக் கூடாது என்பதற்காகத்தான் இப்படியொரு ஃபன்னான பீஸ்ட் பட ஸ்டில்லை சன் பிக்சர்ஸ் திடீரென வெளியிட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கேஜிஎஃப் பார்த்து

கேஜிஎஃப் பார்த்து

இப்படி பீஸ்ட் படக்குழுவே கேஜிஎஃப் படம் வருவதை பார்த்து பயந்து ஒளிந்து நிற்கின்றனர் என்று அஜித் ரசிகர்கள் இப்பவே ட்ரோல் செய்ய ஆரம்பித்து விட்டனர். மேலும், வித விதமான ட்ரோல்களும், படம் எப்படி இருக்கப் போகுதோ? என்கிற கேள்விகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X