Dhanush: வாட்டர் பாக்கெட் பாடல் உருவானது இப்படித்தான்.. தனுஷ் என்னமா நடிச்சு காட்டுறாரு

சென்னை: தனுஷ் தனது 50வது படமான ராயன் படத்தினை தானே கதை திரைக்கதை அமைத்து இயக்கி நடித்தும் உள்ளார். ராயன் கடந்த ஜூலை 26ஆம் தேதி ரிலீஸ் ஆனது. ராயன் படத்தில் தனுஷுடன் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், வரலஷ்மி சரத்குமார், துஷரா விஜயன், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன்,சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் இடம் பெற்ற வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடல் எப்படி உருவானது, என சன் பிக்சர்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளது.

படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதால் வசூலிலும் வெற்றி பெற்றது. படம் ரூபாய் 100 கோடிகள் வரை வசூல் செய்ததாக கூறப்பட்டது. மேலும், படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தின் இயக்குநர் தனுஷ்க்கு ஒரு செக்-உம், நடிகர் தனுஷ்க்கு ஒரு செக்-உம் என இரண்டு செக்குகள் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

raayan water pocket song dhanush

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். இவரது இசையில் இந்தப் படத்தில், மொத்தம் ஐந்து பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இதில் படம் ரிலீஸ்க்கு முன்னர் படக்குழு தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட இரண்டாவது பாடல் வாட்டர் பாக்கெட் பாடல். அந்த பாடல் லிரிக் வீடியோவாக ரிலீஸ் ஆனபோதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் வாட்டர் பாக்கெட் பாடலின் வீடியோ சாங் கடந்த 5ஆம் தேதி யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டது.

raayan water pocket song dhanush

ஒரு கோடி: இந்த பாடல் யூடியூப்பில் ரிலீஸ் செய்யப்பட்டதில் இருந்தே யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் பாடல் வெளியாகி ஒருவாரத்திற்குள்ளே யூடியூப்பில் ஒரு கோடியே 12 லட்சங்களுக்கும் மேல் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்தது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது

raayan water pocket song dhanush

பாடியவர்கள்: இந்தப் பாடலை, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பாடகர் ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். மேலும் இந்தப் பாடலை கானா காதர் எழுதியுள்ளார். இந்த பாடல் படத்தின் முதற்பாதியில் வருகின்றது. இந்தப் பாடலை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் திரையரங்கிலேயே ஆட்டம் போட்டு கொண்டாடினர்.

raayan water pocket song dhanush

வீடியோ: இந்நிலையில் இன்று அதாவது அக்டோபர் 24ஆம் தேதி படக்குழு வாட்டர் பாக்கெட் பாடல் உருவானது எப்படி என்ற வீடியோவை வெளியிட்டுள்ளது. படத்தின் இயக்குநர் தனுஷ், நடிகர் சந்தீப் கிஷனுக்கு பாடலுக்கான முந்தையக் காட்சியில் எப்படி நடிக்க வேண்டும் என நடித்துக் காட்டும் வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X