கூலி மியூசிக் சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்.. யஷ், விஜய் தேவரகொண்டா படத்துக்கு உச்சத்தில் சம்பளம்!
சென்னை: சாய் அபயங்கர் வந்து சென்சேஷனலாக ஆல்பம் பாடல்களை போட சூர்யா படம், அல்லு அர்ஜுன் படம் என அவருக்கு அடுத்தடுத்து பெரிய படங்கள் கிடைத்தாலும் அனிருத்துக்கு அதை பற்றி எந்தவொரு கவலையும் இல்லை. அதற்கு மேல், அவர் படுபிசியாக இருந்து வருகிறார். இந்த மாதத்திற்குள் இரண்டு பெரிய படங்களுக்கு ஒட்டுமொத்த ரீ ரெக்கார்டிங் பணிகளையும் முடித்துக் கொடுக்க வேண்டிய இடத்தில் அவர் இருக்கிறாராம்.
ரஜினிகாந்தின் கூலி சிக்கிடு பாடலை முடித்துக் கொடுத்த அனிருத் இசை வெளியீட்டு விழா மற்றும் தனது இசைக்கச்சேரி என படுபிசியாக இருக்க, விஜய் தேவரகொண்டாவின் ஃப்ரீடம் படத்துக்கான இசை வேலைகளை முடிக்கும் நெருக்கடிக்கும் தள்ளப்பட்டிருக்கிறார்.

அனிருத்தை கடத்திக் கொண்டே போய் விடுவேன் என விஜய் தேவரகொண்டா அவரை பற்றி அந்தளவுக்கு புகழ்ந்து பேசியிருக்கும் நிலையில், அந்த படத்துக்கும் அவர் தரமான இசையை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதுமட்டுமின்றி விஜய் தேவரகொண்டா மற்றும் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் உள்ளிட்ட படங்களுக்கு பல கோடி ரூபாயை சம்பளமாக வாங்கியிருக்கிறார் அனிருத் என தகவல்கள் கசிந்துள்ளன.
சன் பிக்சர்ஸ் போட்ட உத்தரவு: ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், ஜூலை மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த இசை பணிகளையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் அனிருத்திடம் உத்தரவு போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் வெளிநாடுகளுக்கு சென்சாருக்காக படத்தை அனுப்ப வேண்டிய சூழலில் இந்த மாத இறுதிக்குள் இழுத்தடிக்காமல் அனிருத் அதை செய்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.
கிங்டம் படத்துக்கு இத்தனை கோடி: கெளதம் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, பாக்யாஸ்ரீ போர்ஸ் மற்றும் சத்யதேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் கிங்டம் திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 4ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டும். ஆனால், அந்த படம் கடைசி நேரத்தில் போஸ்ட்போன் செய்யப்பட்டது. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்துக்கு இசையமைக்க அனிருத்துக்கு 11 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறதாம். ஜூலை மாதத்துக்குள் அனிருத் இசையமைத்து முடித்தால் தான் படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்கின்றனர்.

யஷ் படத்துக்கு அதை விட அதிக சம்பளம்: மற்ற மொழிப் படங்களுக்கும் அனிருத் இசையமைத்து வருகிறார். விஜய் தேவரகொண்டா படத்தைத் தொடர்ந்து தற்போது கன்னடத்தில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்துக்கும் அனிருத் தான் இசை என தகவல்கள் கசிந்துள்ளன. அந்த படத்துக்கு இசையமைக்க அதிகபட்சமாக 12 கோடி ரூபாய் வரை அனிருத் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். ரஜினிகாந்தின் கூலி படத்துக்கும் அவர் பெரிய தொகையை சம்பளமாக வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. செம பிசியாக இருக்கும் அனிருத் அடுத்தடுத்து வெளியாகவுள்ள பெரிய படங்களுக்கு பக்காவான இசையை அமைக்க வேண்டும் என்பது மட்டுமே ரசிகர்களின் ஒரே விருப்பமாக உள்ளது. கூலி, கிங்டம் என இசை வெளியீட்டு விழாக்களிலும் விரைவில் அனிருத்தின் லைவ் பர்ஃபார்மன்ஸை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











