பார்சலில் வந்த கிப்ட்… திடீரென காணாமல் போன பெப்சி உமா.. காரணம் என்ன தெரியுமா?

சென்னை: தொகுப்பாளினி பெப்சி உமா, தனது வீட்டுக்கு பார்சலில் வந்த கிப்ட் குறித்து அதிர்ச்சியான தகவலை தெரிவித்துள்ளார்.

90 கால கட்டத்தில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர் உமா. இவர் பெப்சி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

போன் செய்து விருப்பமான பாட்டை கேட்கும் இந்த நிகழ்ச்சியில் இவரிடம் போன் செய்து பேசுவதற்காகவே பலர் தொலைபேசி முன் தவம் கிடைத்த கதையும் நடந்துள்ளது.

பெப்சி உமா: சன் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சாதனை படைத்தார். இவரின் வசீகரமான அழகுக்கும், தமிழ் உச்சரிப்புக்கும் ரசிகர்கள் பலர் அடிமையாகவே இருந்தனர். புகழின் உச்சியில் இருந்த பெப்சி உமா திடீரென அந்த நிகழ்ச்சியை விட்டு விலகிவிட ஆள் அட்ரஸ் தெரியாமல் போனார்.

Sun television anchor pepsi uma latest interview trending on social media

மூட்டை மூட்டையா காதல் கடிதம்: இதனை அடுத்து அண்மையில் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட உமா பேட்டி அளித்திருந்தார். அதில், நான் பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது மூட்டை மூட்டையா காதல் கடிதம் வரும், அதை பார்க்கவே எனக்கு பிரம்மிப்பாக இருக்கும். அதே போல என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் வீட்டிற்கு ஒரு கிப்ட் பார்சல் வந்தது. அந்த பார்சலில் மதுரையைச் சேர்ந்த ரசிகை தனது சுண்டு விரலை வெட்டி பார்சல் அனுப்பி இருந்தார்கள். இதைப்பார்த்து நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். உடனே அவங்களுக்கு போன் பண்ணி திட்டினேன்.

சினிமா ஆர்வம் இல்லை: அதேபோல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது, மேலும் சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது அதற்கும் நோ சொல்லிவிட்டேன். பாரதிராஜா, கே.பாலசந்தர் போன்ற இயக்குநர்கள் படம் எடுக்க அழைத்த போதும் நான் நடிக்க தயாராக இல்லை. அப்படி சொல்வதற்கு காரணம் எனக்கு நடிக்க தெரியாது என்று இல்லை, நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் இல்லாததால் நான் நடிக்கவில்லை.

விலக இதுதான் காரணம்: 1994ம் ஆண்டு உமா பெப்சி உங்கள் சாய்ஸ் ஷோவின் தொகுப்பாளராக ஆனார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு மேலாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறேன். ஒரு கட்டத்தில் என் உடல் நிலை சரியில்லாததால் எனக்கு ஓய்வு தேவைப்பட்டதால், அதில் இருந்து விலகி விட்டேன். அது என் மனதார எடுத்த முடிவு என்பதால், அதில் எனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை.

சொந்த பிஸ்னஸ்: நான் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போதே பிஸ்னஸ் செய்து கொண்டு இருந்தேன் தற்போது அந்த பிஸ்னசை செய்து வருகிறேன். இடையில் ஜெயா டிவில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். அதே போல என் வயதிற்கும்,அனுபவத்திற்கும் ஏற்றமாதிரி நிகழ்ச்சிகள் வந்தால் நிச்சயம் தொகுத்து வழங்குவேன் என்று பெப்சி உமா அந்த பேட்டியில் பேசி உள்ளார். 11 வயதிலிருந்தே தொகுப்பாளினியாக பணியாற்றிய உமா சுகேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X