Kaniha: சீரியலும் இல்ல.. படமும் இல்ல.. கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய கனிகா!

சென்னை: வரலாறு திரைப்படத்தில் அஜித்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகை கனிகா, தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாள மொழி திரைப்படங்களில் நடித்துள்ள இவர், சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியலில் மிகவும் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்கள் மனதில் பெயர் எடுத்தார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

நடிகை கனிகாவின் அழகான தமிழ் உச்சரிப்பும், இனிமையான குரலும் இவருக்கு தமிழ் திரையுலகில் நுழையும் வாய்ப்பை தேடித்தந்தது. இயக்குனர் சுகி கணேசன் இயக்கத்தில் உருவான ஃபைவ் ஸ்டார் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். காதல் திரைப்படமான இப்படத்தில், நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் கனிகா. இதையடுத்து, எதிரி, ஆட்டோகிராப் போன்ற திரைப்படத்தில் நடித்தார். மேலும், அஜித்துடன் சேர்ந்து வரலாறு படத்தில் நடித்து தலயுடன் நடித்த நடிகை என்று பெயர் எடுத்தார்.

kaniha Ethirneechal instagram

நடிகை கனிகா: பின்னணி பாடகியான கனிகா, பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்து இருக்கிறார். சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவுக்கும், அன்னியன் திரைப்படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்தது இவர் தான். இவர் தமிழ் திரைப்படங்கள் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மலையாள சினிமாவிற்கு சென்ற கனிகா, அங்கு கணிசமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

kaniha Ethirneechal instagram

கவர்ச்சி போஸ்: படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே 2008 ஆம் ஆண்டு சியாம் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த கனிகா, திருச்செல்வம் இயக்கிய எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடித்து வந்தார். அந்த தொடரில் புடவையில் குடும்ப பெண்ணாக நடித்து அசத்திய இவர், தற்போது தனது இன்ஸ்டாவில் குட்டி டவுடர் போட்டுக்கொண்டு ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக்காக்கி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், சீரியல் முடிந்துவிட்டது என்ற தைரியமா என கேட்டு வருகின்றனர்.

kaniha Ethirneechal instagram

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X