கொலைகாரி ஜனனி தான்.. குணசேகரனின் மாஸ்டர் பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: 3 மருமகளும் வீட்டுக்குள் வர, குணசேகரன், ஈஸ்வரியை இந்த நிலைக்கு கொண்டு வந்ததே நீ தான், நீயும் புருஷன் கூட ஒழுங்க வாழாமல், அடுத்தவர்களையும் வாழவிடாமல் பண்ணிக்கிட்டு இருக்க, இந்த கல்யாணம் நடக்கக்கூடாது என்பதற்காக நீ தான் ஈஸ்வரியை அடிச்சி இருக்க, அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு அதை காட்டி அதே கொற்றவை உன்னை கைது செய்வதை நான் பார்ப்பேன் என்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜனனி, உங்களை காப்பாற்றிக் கொள்ள என்ன வேண்டுமானாலும், செய்வீங்க, ஈஸ்வரி அக்காவின் இந்த நிலைமைக்கு நீங்க தான் காரணம் என்பதை நிரூபித்து உங்களை நான் உள்ளே தள்ளுகிறேன் என சவால் விடுகிறாள்.
அதன், ஜனனி, அக்கா ஈஸ்வரி அக்கா வழக்கில் இன்னும் எப்ஐஆர் கூட போடவே இல்லை, நாம நேரடியாக மாஜிஸ்ட்ரேட்டில் இதுபற்றி முறையிடலாம் என்று வீட்டை விட்டு கிளம்புகின்றனர். அப்போது, கரிகலான் ஒவராக பேச, பளார் என ஒரு அறைவிடும் ஜனனி, கையில் அருவாளை எடுத்துக்கொண்டு, இந்த ஜனனியை சக்தியை வைத்து சமாளித்துவிடலாம் என்று நினைச்சா அது நடக்காது. இதுக்கு மேல நான் என்ன செய்யப்போகிறேன் என்று பாருங்க என்று உச்சகட்ட கோவத்தில் இருக்கிறார். இதையடுத்து, குணசேகரன், இதுக்கு மேல ஜனனி இந்த குடும்பத்திற்கு தேவை இல்லை, தர்ஷன் கல்யாணத்தோடு சேர்த்து சக்திக்கும் கல்யாணம் செய்து வைத்துவிடலாம் அதற்கான ஏற்பாடுகளை பார் என்கிறார்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: மாஜிஸ்ட்ரேட் பார்ப்பதற்காக அனைவரும் காத்து இருக்கின்றனர். அங்கு வரும் குணசேகரன் தரப்பு வழக்கறிஞர், அந்த வீட்டு பெண்களுக்கு அவர் மீது பழிபோடுவதே வேலையாக போய் விட்டது. இந்த வழக்கில் இன்னும் எப்ஐஆர் கூட போடாத போது, மாஜிஸ்ட்ரேட்டை ஏன் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார். இதனால், ஆத்திரப்படும் ஜனனி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, நியாயம் வேண்டும் என போராடுகிறாள். அந்த நேரம் நீதிபதி காரில் வந்து இறங்க, என்ன பிரச்சனை என்று விசாரிக்க ஜனனி எங்களுடைய அக்காவிற்கு ஒரு கொடுமை நடந்து இருக்கிறது. அதற்கு காரணம் குணசேகரன் தான். எங்களுக்கு சரியான நியாயம் வேண்டும் என கூறுகிறாள். இதைத்தொடர்ந்து நீதிபதி அவர்கள், இந்த வழக்கை நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரி விசாரிப்பார். இந்த வழக்கை கொற்றவை விசாரிக்க கூடாது என்கிறார்.
கொலைகாரி ஜனனி தான்: மறுபக்கத்தில் வீட்டில் குணசேகரன், அனைவரும் போராட்டம் நடத்தியதை பார்த்து கடுப்பான கதிர். இதற்குத்தான் அவளுங்களை வீட்டை விட்டு அனுப்ப வேண்டாம் என்று சொன்னோன். அப்போ பாத்தீங்களா... நானே அவளை வெட்டி கொன்றுவிடுகிறேன் என ஆவேசமாக வெளியில் கிளம்புகிறான். கதிரை சமாதானப்படுத்தும் குணசேகரன், அவளுங்களை வெட்டிவிட்டு, ஞானம் மாதிரி நீயும் ஜெயிலுக்கு போக போறியா.. இந்த கொலைகாரி ஜனனியை நான் தண்டனை வாங்கி தருகிறேன். என் பொண்டாட்டியை ஜனனி கொன்னுட்டா, அதை மறைக்கத்தான் இப்படி நாடமாடுகிறாள், அவளை நான் நிச்சயம் ஜெயிலுக்கு அனுப்புவேன் என குணசேகரன் சொல்ல, ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications