ஈஸ்வரி தலையில் அடித்தது குணசேகரன் தான்.. ஆதாரம் சிக்கியது.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: ஈஸ்வரி மருத்துவமனையில் மோசமான நிலையில் இருப்பதை கேள்வி பட்ட விசாலாட்சி, அவளை பார்ப்பதற்காக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று சொல்கிறாள். அப்போது ஆத்திரப்படும் குணசேகரன், இத்தனை நாளா, மகள், மகன், பொண்டாடி இருந்தும் இல்லை என நினைத்துக்கொண்டு தான் வாழ்ந்து கொண்டு இருந்தேன். நீங்கள், இப்போ ஈஸ்வரியை பார்க்க சென்றாள் இன்னையிலிருந்து எனக்கு அம்மாவும் இல்லை என்று முடிவு கட்டி விடுவேன். என்னை தலை முழுகி விட்டு நீங்கள் தாராலமாக ஈஸ்வரியை பார்க்க போகலாம் என்கிறார். அப்போது, தர்ஷினி ஜீவானந்தத்திற்கு போன் செய்து ஈஸ்வரி மருத்துவமனையில் சேர்த்த விஷயத்தை சொல்ல, ஜீவானந்தம் ஒடி வருகிறார்.
ஈஸ்வரிக்கு அறிவை சிகிச்சை முடிந்து அனைவரும் பார்க்க செல்கின்றனர். அப்போது ஈஸ்வரி அனுப்பிய வாய்ஸ் நோட் ஜனனிக்கு வருகிறது. அந்த வாய்ஸ் நோட்டில் எனக்கு ஏதோ ஒரு, விபரீதம் நடக்கப்போகிறது என்று மனதிற்குள் தோன்றுகின்றது. எனக்கு அப்படி ஏதாவது விபரீதமாக நடந்தால், நீங்கள் அனைவரும் உடைந்து போகக்கூடாது உங்களுடைய லட்சியத்தை நோக்கி நீங்கள் நடக்க வேண்டும். துணிந்து போராட வேண்டும் அடுத்த ஜென்மத்திலும், நீங்கள் 3 பேரும் என்னுடைய தங்கைகளாக பிறக்க வேண்டும். தர்ஷனையும் தர்ஷினியையும் நீங்கள் நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என பேசி இருந்தார். இதைக் கேட்டு அனைவரும் கதறி அழுகின்றனர்.

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஈஸ்வரி மருத்துவமனையில் இருக்கும் விஷத்தை கேள்விப்பட்டு அங்கு வரும் கொற்றவை மருத்துவரிடம் என்ன நடந்தது என்று விசாரிக்கிறாள். அப்போது மருத்துவர் நீங்கள் நினைப்பது போல விழுந்ததால், தலையில் அடிபடவில்லை. அவரை யாரோ பயங்கரமாக தாக்கி இருக்கிறார்கள், கழுத்தை நெரித்து இருக்கிறார்கள் என சொல்கிறார். இதைக்கேட்டு, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். அப்போது தர்ஷினி, நான் அப்போவே சொன்னேன். அந்த குணசேகரன் தான் இதை செய்திருப்பார். தர்ஷன் கல்யாண விஷயத்தில் அம்மாவுக்கும் அவருக்கும் பெரிய பிரச்சனை இருந்தது. அதனால் தான் இப்படி செய்திருப்பார் அந்த வீட்டில் இருக்கும் ஒருவரையும் விடாதீர்கள், எல்லாரையும் பிடிச்சி ஜெயில்ல போடுங்க என சொல்கிறார்.
குணசேகரன் தான் காரணம்: அப்போது கொற்றவை, நீ அமைதியாக இரு தர்ஷனி இந்த விசாரணையை நான் இப்போதே குணசேகரன் வீட்டில் இருந்தே தொடங்குகிறேன் என்று சொல்ல, தர்ஷனும், தர்ஷினியும் நானும் வீட்டிற்கு வருகிறேன் என்று வீட்டிற்கு கிளம்புகின்றனர். இதையடுத்து, வீட்டில் அறிவுக்கரசிக்கு குணசேகரன் மீது ஏதோ சந்தேகம் வர, ஈஸ்வரி விழுந்து கிடந்த அறைக்கு சென்று எல்லா இடத்திலும் தேடிப் பார்க்கிறாள். அப்போது, அலமாரியில் இருந்த செல்போனில் குணசேகரன் ஈஸ்வரியின் கழுத்தை நெரிக்கும் வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைகிறாள். அந்த நேரம் பார்த்து கொற்றவை வீட்டுக்கு வந்து விசாரணை நடத்த அறிவுக்கரசி இருக்கும் அறைக்கு வரும் கொன்றவை கதவை தட்ட, அறிவுக்கரசி அந்த போனை மறைத்து வைத்து விடுகிறாள். பின் வீட்டில் விசாரணை நடத்திவிட்டு அனைவரும் செல்ல, தர்ஷனும் கிளம்பும் போது, கதிர் நீ எங்க தர்ஷன் போற, வீட்டில் இரு, உங்க அம்மா செத்ததும் ஹாஸ்பிடல் போய் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்ல, தர்ஷன் ஆத்திரத்தில் கத்துகிறான். இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











