கடை திறப்பு விழாவில் அடிதடி.. துணிந்து நிற்கும் ஜனனி.. எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: நிலத்தின் உரிமையாளர் நிலத்தை வாடகைக்கு தர மாட்டேன் என்று சொல்லிய நிலையில் ஜனனி இன்று திறப்பு விழா நடத்துவேன் என சவால் விட்டு அங்கேயே நின்று கொண்டு இருக்கிறாள். வீட்டில் விசாலாட்சி திறப்புவிழா நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக மீனாட்சி அம்மன் முன் நின்று கண்ணீர் விட்டு வேண்டுகிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்றுபார்க்கலாம்.

நிலத்தின் உரிமையாளர் இன்று திறப்பு விழா நடக்காது, மூடு விழா தான் நடக்கப்போகிறது அனைவரும் சீக்கிரமாக இங்கிருந்து கிளம்பிவிட்டால் சேதாரம் இல்லாமல் செல்வீர்கள் இல்லையென்றால் இங்கு கலவரம் நடக்கும் என மிரட்டுகிறார். அப்போது ஜனனி, இந்த மிரட்டளுக்கெல்லாம் பயப்படும் ஆள் நான் இல்லை வண்டியின் மீது கை வைத்து பார் என சொல்கிறாள். இதனால் ஆத்திரப்படும் நிலத்தின் உரிமையாளர் ரவுடிகளிடம் வண்டியை அடித்து நொறுக்குங்கடா என சொல்கிறார். அப்போது ஜனனி, வீடியோவை எடுத்து லைவில் போட்டு விடுவேன் என சொல்லி மிரட்டுகிறாள். இதைப்பார்த்த நிலத்தின் உரிமையாளர், போனை காட்டினா பயப்படும் ஆள், நான் இல்லை. குணசேகரனுக்காக தான் அமைதியா இருக்கேன் இன்னும் 5 நிமிஷத்தில் இந்த இடத்தில் இருந்து அனைவரும் கிளம்பவில்லை என்றால், அனைவரையும் அடித்து விரட்டுங்கள் என சொல்கிறாள்.

Ethirneechal Thodargiradhu Suntv promo
Photo Credit:

எதிர்நீச்சல் தொடர்கிறது: மறுபக்கம் குணசேகரன் அறிவுக்கரசிக்கு ஃபோன் செய்து, அம்மா விசாலாட்சியிடம் போனை கொடுக்கும்படி சொல்கிறார். இதையடுத்து அறிவுக்கரசி போனை எடுத்துச் சென்று விசாலாட்சி இடம் கொடுக்க, விசாலாட்சி போனை வாங்க மறுக்கிறாள். அப்போது முல்லை போனை ஸ்பீக்கரில் போட குணசேகரன் என்கூட பேசுவதற்கு உனக்கு விருப்பம் இல்லையா... அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவனாக ஆகிவிட்டேனா? அந்த ஜனனி என்ன சொன்னா எதற்காக நீ, எனக்கு எதிராக சாட்சி சொன்ன என்ற எல்லா விஷயமும் எனக்கு தெரியும், அவ உன் மண்டையை நல்லா கழுவி இருக்கா, இதன் நீ எனக்கு எதிராக மாறிவிட்டன.

கதறி அழும் விசாலாட்சி: அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால், நான் இப்போது ஒரு விஷயத்தை சொல்கிறேன் அதை மட்டும் நீ செய்தால் போதும். அந்த திறப்பு விழாவிற்கு நீ போகக்கூடாது, அப்படி திறப்பு விழாவிற்கு நீ போனால் அதைவிட எனக்கு அவமானம் வேறு எதுவும் இல்லை. நான் சொன்னதையும் மீறி, நீ திறப்பு விழாவிற்கு போனா, அத்தோட உன் மகன் குணசேகரனை நீ மறந்து விட வேண்டியது தான் என எச்சரிக்கிறான் இதைக்கேட்டு விசாலாட்சி என்ன செய்வது என தெரியாமல் கதறி அழுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X