பாலில் அடித்து சத்தியம் பண்ணுங்க.. குணசேகரனின் அடுத்த அதிரடி திட்டம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது!
சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோடில் ஆடிட்டரை வர சொல்லி தன்னுடைய சொத்துக்களை ஞானம் கதிரின் பேருக்கு மாற்றுவதாக ஆதி குணசேகரன் சொல்கிறார். இதையடுத்து வீட்டிற்கு ஆடிட்டர் வர, எப்போது என்ன அவசரம் என்கின்றனர்த. அப்போது, ஆடிட்டர், வழக்கறிஞர் சாருபாலா அண்ணனின் ஜாமீனை ரத்து செய்ய இருக்கிறார். ஜாமீனில் வெளிய வந்த குணசேகரன் தடயத்தை அழிக்க பார்ப்பதாக புகார் அளிக்கப்பட்டது தொடர்ந்து அவர் விரைவில் கைதாக உள்ளார்.

இப்படி பல வழிகளில் அண்ணனுக்கு பிரச்சனை வருவதால், அவர் இந்த சொத்துக்களை உங்கள் மீது எழுதி வைக்க முடிவு செய்து இருக்கிறார் என சொல்கிறார். இதைக்கேட்டு ஆத்திரப்படும் கதிர், அதற்கெல்லாம் முடியாது சொத்தை பிரிப்பது இப்போது அவசியம் இல்லை என்று சொல்கிறார். உடனே குணசேகரன், பேசிப் பேசி நான் ஓய்ந்து விட்டேன். இதற்கு மேல் பேசுவதற்கு எதுவுமே இல்லை. இப்பொழுது உங்கள் இருவர் மீதும் நான் சொத்துக்களை எழுதி வைத்து இருக்கிறேன். என்னை மதிக்காத, என்னுடைய மகன் மகளுக்கு இதில் பங்கு இல்லை . சக்திக்கு இதில் பங்கு இருக்கிறது. அவன் என் மீது இருக்கும் கோவத்தில் இருப்பதால்,சொத்தை வேண்டாம் என சொல்கிறான். ஒருவேளை என் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிந்து கொண்டு, சக்தி இந்த சொத்தில் பங்கு கேட்டால் நீங்கள் நிச்சயமாக கொடுக்க வேண்டும் என சொல்கிறார்.
எதிர்நீச்சல் தொடர்கிறது: இதைத்தொடர்ந்து,கதிர் உங்கள் விருப்பப்படியே நாங்கள் சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு விடுகிறோம் என சொல்கிறார். அப்போது குணசேகரன் கையெழுத்து போடுவதற்கு முன்னால், நான் என்ன நினைக்கிறேனோ அதை மனதார ஏற்றுக்கொள்கிறேன், அதற்கு முழு சம்மதம் என நினைத்துக் கொண்டு சாமி படத்தில் முன் இருக்கும் பாலில் அடித்து சத்தியம் செய்துவிட்டு ஒவ்வொருத்தரும் கையெழுத்து போடுங்கள் என சொல்கிறார். இதை தொடர்ந்து ஞானம், கதிர் இருவரும் மீனாட்சி அம்மன் படத்தின் முன் இருக்கும் பாலில் சத்தியம் செய்துவிட்டு சொத்துப்பத்திரத்தில் கையெழுத்து போடுகின்றனர். இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கும் ஜனனிக்கு குணசேகரன் என்ன திட்டத்தோடு இருக்கிறார் என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











