வாட்ஸ் அப் க்ரூப் மூலம் போதை பொருள் சப்ளை.. சுந்தரி சீரியல் நடிகை கைது!

சென்னை: சன் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து வரும் நடிகை போதை பொருள் வைத்திருந்த நிலையில், ராயப்பேட்டை வளாகத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி உள்ளது.

உலக அளவில் போதைப்பொருள் புழக்கம் என்பது புற்றீசலாக பெருகி வருகிறது. இது மாணவர்கள் முதல் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது இதை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் நாட்டில் போதை இல்லா நிலையை உருவாக்க அனைத்து கல்வி நிலையங்களிலும் போதைப் பொருள் எதிர்ப்பு கிளப்புகள் மற்றும் தன்னார்வ குழுக்களை உருவாக்கி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மேலும்,தமிழ்நாடு காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்புப் பிரிவு போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

sundari serial meena drugs

வாட்ஸ் அப் க்ரூப் மூலும் சப்ளை: இந்நிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் சென்னை ராயப்பேட்டை யில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகத்தில் போலீகார் மீனா என்பவரை கைது செய்தனர். அவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான சுந்தரியில் நடித்துள்ளார். அது மட்டுமில்லாமல் நடிகர் ஆர்யா நடித்த டெடி படத்திலும் நடித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் நடிகை மீனாவின் செல் போனை ஆய்வு செய்ததில்,போதைப் பொருளுக்காக வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதன் மூலம் சக நடிகர்களுக்கு போதை பொருட்களை விற்று வந்திருப்பது தெரியவந்துள்ளது.

பீதியில் சின்னத்திரை: மேலும் ஒரு கிராம் மெத்தம்பேட்டட் மைனை 2 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை 3 ஆயிரத்துக்கு இவர் விற்றுவந்துள்ளார். இவர் யாரிடமிருந்து இந்த போதைப்பொருட்களை வாங்கினார், இவர் இதை யாருக்கெல்லாம் விற்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில் இவருடன் தொடர்பில் இருந்தவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். இதனால், சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. நடிகை மீனா 5 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X