முதல் சீசனில் அடிவாங்கிய ‘டாப் குக்கு டூப் குக்கு‘.. மாஸ்டர் பிளான் போட்ட சன்டிவி.. விரைவில் சீசன்2!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிர்கள் இருக்கிறார்கள்.பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பது தான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. இதில், நடுவர் விதவிதமான டாஸ்குகளை போட்டியாளர்களுக்கு கொடுப்பார், அதை செய்ய விடாமல் தடுப்பதற்கு என்றே சில கோமாளிகளையும் கொடுப்பார்கள். இந்த நிகழ்ச்சியில் சமையலை விட, கோமாளித்தனம் தான் அதிகமாக இருக்கும்.
மூன்று சீசன்களாக சிறப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் சிவாங்கி குக்காக கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, ஐந்தாவது சீசனில் செஃப் வெங்கடேஷ் பட் நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துவிட்டு, சன் தொலைக்காட்சியில் டாப் குக்... டூப் குக்... என்ற நிகழ்ச்சியில் நடுவராக களமிறங்கினார். இதையடுத்து, குக் வித் கோமாளி சீசன் ஐந்தில் நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ், செஃப் தாமு இருவரும் இருந்தனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக ரக்ஷன் மற்றும் மணிமேகலை இருந்தனர்.

சீசன் 6 : குக் வித் கோமாளி நிகழ்ச்சியை சுற்றி எத்தனை சர்ச்சைகள் வந்தாலும், அந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களை குஷிப்படுத்தும் வகையில், குக் வித் கோமாளி சீசன் 6 பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில், பிரியா ராமன், லட்சுமி ராமகிருஷ்ணன், மதுமிதா, ஷபானா ஆகியோர் சிறப்பான சமையலை கொடுத்து வருகிறார்கள். தற்போது, குக் விக் கோமாளி இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் தொலைக்காட்சியில் 'டாப் குக்கூ டூப் குக்கூ' என்ற பெயரில் முதல் சீசன் ஆரம்பமானது.
டாப் குக்கு டூப் குக்கு 2: ஆனால், முதல் சீசன் எதிர்பார்த்த அளவில் ஹிட் இல்லை என்றாலும் ஓரளவு நல்ல வரவேற்பையே பெற்றது. இதற்கு காரணம், முதல் சீசன் தொடங்கிய நேரத்தில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் நடந்து வந்ததால், சன்டிவியில் 'டாப் குக்கூ டூப் குக்கூ' எடுபடாமல் போனது. அதை புரிந்து கொண்ட சன் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடியும் நேரத்தில், 'டாப் குக்கு டூப் குக்கு' இரண்டாவது சீசனை தொடங்க உள்ளது. இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 17ந் தேதி அறிவிக்கப்படும் என வெங்கடேஷ் பட் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த போஸ்ட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கலந்து கொள்ள இருக்கும் போட்டியாளர்கள் யார்... டூப் குக் யார் என்பது விரைவில் தெரிந்துவிடும்


Click it and Unblock the Notifications











