பிசினஸ் ஸ்டார்ட்.. சூரரைப் போற்று சாட்டிலைட் உரிமத்தை கைப்பற்றிய சன் டிவி.. எல்லாம் அதுக்குத்தானா?
Soorarai Pottru, Suriya, Sun Tv, Satellite rights, சூரரைப் போற்று, சூர்யா, சன் டிவி, சாட்டிலைட் உரிமம்
Recommended Video
சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.
மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் பாக்ஸிங்கை மையமாக வைத்து வெளியான இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா, சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில், விமானத்தை மையமாக வைத்து இயக்கியுள்ள படம் தான் சூரரைப் போற்று.
தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தான் தயாரிக்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், சுதா கொங்கரா படத்தை சன் பிக்சர்ஸ் வாங்கியதற்கான காரணமும் அதுதானா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.
பருந்தாகுது ஊர்க்குருவி
உயர உயர பறந்தாலும், ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழ மொழியை மாற்றி அமைக்கும் விதத்தில், கடின உழைப்பு மற்றும் முயற்சி செய்தால், ஊர்க்குருவியும் பருந்தாகும் என்ற அர்த்தத்தோடு சூரரைப் போற்று திரைப்படம் உருவாகி உள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பெரிய அளவில் விளம்பரம்
ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டு வரும் சூரரைப் போற்று படத்தின் இரண்டாம் சிங்கிளான வெய்யோன் சில்லி, சமீபத்தில், விமானத்தில் பறந்த படி நடுவானில் ரிலீஸ் செய்யப்பட்டது. காலா, தர்பார் படங்களைத் தொடர்ந்து, விமானத்தில் பெரிய அளவில் இந்த படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

பலத்த போட்டி
சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய்யின் மாஸ்டர், விக்ரமின் கோப்ரா மற்றும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் வரும் சம்மருக்கு மோத உள்ளன. இந்த ரேஸில், சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் விஜய்யின் மாஸ்டர் படங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூடுபிடிக்கும் பிசினஸ்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் பாதி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையிலேயே, 200 கோடிக்கும் மேல் ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆகி இருந்தது. அந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தையும் சன் டிவி பெற்றிருந்தது. இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் பிசினஸும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

சன் டிவி
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு நடிப்பில் உருவாகி உள்ள சூரரைப் போற்று திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சாட்டிலைட் உரிமத்தை தற்போது சன் டிவி பலத்த போட்டிக்கு இடையே கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.

எல்லாம் இதுக்குத்தானா?
தலைவர் 168 படத்தைத் தொடர்ந்து, தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சர்க்கார் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் படத்தை தயாரிக்க உள்ள சன் பிக்சர்ஸ், தளபதி 65 படத்தை சுதா கொங்கரா இயக்க உள்ளார் என்ற தகவல்கள் உறுதியாகி உள்ள நிலையில், சூரரைப் போற்று படத்தை வாங்கி உள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











