24 வயசுல வாழ்க்கையே முடிஞ்சிடுச்சி… சீரியல் நடிகையின் கண்ணீர் கதை!
சென்னை: சீரியல் நடிகை ரிஹானா 24 வயசுல என் வாழ்க்கையே மொத்தமாக முடிந்து விட்டது என்று பேட்டி ஒன்றில் கண்கலங்கி பேசி உள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஆனந்தராகம், ஜீ தொலைக்காட்சியில் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் பிஸியாக நடித்து வருபவர் தான் நடிகை ரிஹானா.
அதிரடியாக பல கருத்துக்களை துணிந்து சொல்லக்கூடிய துணிச்சலான பெண்ணாக இவர், சம்யுக்தா, விஷ்ணுகாந்த் மீது அடுக்கடுக்கான புகார் கூறிய போது, விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

நடிகை ரிஹானா: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ரிஹானா தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பிரச்சனைகளை கண்ணீருடன் கூறியுள்ளார். அதில், எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு சீரியலில் நடிக்க விருப்பம் இல்லை. என் தங்கை ஆடிஷன் டெஸ்டிற்கு போகும் போது, நானும் கூட போய் இருந்தேன் அப்போது ஒரு இயக்குநர் நீங்க நடிக்கிறீங்களா என்று கேட்டார்.
முதல் சீரியல்: சிம்ரன் நடித்த அக்னி பறவை என்ற சீரியலில் நான் டீச்சராக நடிச்சேன். அதன் பிறகு சன் டிவியில் ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. அப்போது எனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், அந்த சீரியலில் நடிக்க முடியாமல் போனது. அதன் பிறகு வாய்ப்பு வராததால். நான் ஏற்கனவே நடத்தி வந்த மெஸ்சை தொடர்ந்து நடத்தி வந்தேன்.
24 வயசுல வாழ்க்கையே முடிஞ்சிடுச்சி: ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல சம்பாதித்து தான் ஆக வேண்டிய நிலை வந்ததால், நடிப்பது என்று முடிவு எடுத்து நடிக்கத் தொடங்கினேன். இதனால், எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டோம். இப்போது எனது இரண்டு குழந்தைகளை தான் வளர்த்து வருகிறேன். 18 வயதில் எனக்கு கல்யாணம் ஆச்சு,19 வயதில் குழந்தை பிறந்தது, அடுத்த 24 வயதில் இன்னொரு குழந்தை என இப்படி திரும்பி பார்ப்பதற்குள் எல்லாமே அவ்வளவு சீக்கிரமாக நடந்து முடிந்து விட்டது.
பிரிந்துவிட்டோம்: என் கணவர் ரொம்ப நல்லவர் அவருக்கு எந்த கெட்டப்பழக்கமும் இல்லை, திடீர்னு என்ன ஆச்சுனே தெரியல, என்னிடம் மோசமாக பேச தொடங்கினார். ஒரு நாள் நாலு பேர்கூட போய் உன் குழந்தைகளை பார்த்துக்கோ என்று சொல்லிட்டு போய்விட்டார். என் குழந்தைகளுக்காக நான் சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த பணத்தில் ஆடம்பரமாக வாழமுடியவில்லை என்றாலும், என் குழந்தைகளுக்கு தேவையானதை என்னால் செய்ய முடிகிறது என்று நடிகை ரிஹானா பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











